பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பார்வையாளர்களை பரவசத்தில்
ஆழ்த்தி, சிறந்த நடிகை உட்பட பல சர்வதேச விருதுகளை குவித்துள்ள படம் தான்
‘மார்கரிதா வித் எ ஸ்ட்ரா’. இந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே மனம் அன்பு
நிறைந்து வலியால் மவுனமாக அழுகிறது.
உடல் வளர்ச்சி குன்றியதால் சக்கர நாற்காலியிலேயே வாழ்ந்து வரும் இளம்
பெண்ணின் வாழ்க்கையை துளியும் சினிமாத்தனமின்றி வெகு இயல்பாக
சித்தரித்துள்ள படம் தான் ‘மார்கரிதா’. இதில் அந்த இளம் பெண்ணாக நடித்துள்ள
‘கல்கி கொச்லின்’ சக்கர நாற்காலியில் முடங்கியிருக்கும் பெண்ணின் மன
உணர்வுகளை மிக நுட்பமாக பிரதிபலித்துள்ளார். அவரது தாயாக தமிழ் சினிமாவின்
முன்னணி நடிகை ரேவதி நடித்துள்ளார். ஷோனாலி போஸ் இந்த படத்தை
இயக்கியுள்ளார்.
"நீ கண்டிப்பாக இந்த படத்தைப் பார்க்க வேண்டும்" என்று தனது மனைவி கிரண் ராவ் கூறியதற்கு, "அப்படி அந்த சினிமாவில் என்ன விசேஷம் இருக்கிறது?" என்று கேட்ட அமீர் கான், இந்த படத்துக்கான சிறப்பு திரையிடல் ஒன்றை ஏற்பாடு செய்தார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இயக்குனர் ஷோனாலி உட்பட பலர் கலந்து கொண்ட இந்த திரையிடலில், நடிகை கல்கிக்கு பக்கத்து சீட்டிலேயே அமர்ந்து இப்படத்தை அமீர் கான் பார்த்துள்ளார்.
திரைப்படம் முடிந்து விளக்குகள் போடப்பட்ட போது தான் அமீர்கான், தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுது கொண்டிருந்தது கல்கிக்கு தெரிய வந்தது. அழுதுக்கொண்டே "கல்கி இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அன்புடன் கேட்டுக்கொண்ட அமீர்கான், இது அனைவரும் பார்க்க வேண்டிய படம் இந்த படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வருகிற 17-ம் தேதி இந்த திரைப்படம் ரிலீசாகிறது. cinema.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக