வெள்ளி, 10 ஏப்ரல், 2015

இந்திய ஜாதிகொடுமை பற்றி ஐநா அறிக்கை!

நியூயார்க், ஏப்.9-_ இந்தியாவில் நிலவும் ஜாதீயக் கொடுமைகள் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை மறுக்கப்பட்ட நிலை குறித்து அய்.நா. மன்றத்தில் பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியம் (IHEU)அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஜாதீய பாகுபாடுகள் குறித்து அய்.நாவின் மனித உரிமைகள் குழுவின் அறிக் கையை பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியம் அளித்துள்ளது.
நீதி மற்றும் அமைதிக் கான அம்பேத்கர் மய்யம் அமைப்பின் நிறுவனரும், தலைமை ஆலோசகருமாக யோகேஷ் வர்கடே கடந்த 40 ஆண்டுகளாக மனித உரிமைக்கான களத்தில் பங்களிப்பை அளித்து வருகிறார்.  அவர் தொடங் கிய நீதி மற்றும் அமைதிக் கான அம்பேத்கர் மய்யம் அமைப்பின் சார்பில் ஜாதி குறித்து மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி வரு கிறார். அய்நா அவையின் மில்லினியம் வளர்ச்சி நோக்கங்கள் ஆலோசக ராகவும் இருக்கிறார்.

மனித உரிமை மீறல்கள்
பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியம் (The International Humanist and Ethical Union-IHEU) அமைப்பின் சார்பில் யோகேஷ் வர்கடே கூறும் போது, ஜாதி அடிப்படை யிலான பாகுபாடுகள் மனித உரிமைகளை மீறு பவைகளாக உள்ளன. இதனால், கோடிக்கணக் கான மக்கள் பாதிக்கப்படு கிறார்கள். மக்களைப்பிரிக் கின்ற ஜாதித் தடைகள் தகர்க்கப்பட வேண்டும் என்று அய்.நா.வின் மனித உரிமை ஆணையர் நவிப் பிள்ளையின் கருத்தை வர்கடே எதிரொலித் துள்ளார்.
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 29 பேருக்கு கல்வி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் அய்.நா.வின் கவனத்துக்கு சென்றுள்ளது.
ஜாதீய பாகுபாடுகள் குறித்த பிரச்சினையில் மனித உரிமை கண்காணிப் பகம் மற்றும் பன்னாட்டு பொதுமன்னிப்பு சபை ஆகிய இரண்டு அமைப்பு களும் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள ஆண்ட றிக்கையில் ஆழ்ந்த கவ லையை வெளியிட்டுள்ளன.
ஜாதீய முறை சமத்துவ மின்மையை உருவாக்கி, படிநிலைக் குழுக்களாக மக்களைப் பிரிக்கின்றது. ஜாதி அடிப்படையில் உள்ள பாகுபாடுகளால் சமுதாயத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அரசியல், பொருளாதார, சமூகம் மற்றும் பண் பாட்டு அடிப்படையி லான உரிமைகள் பாதிப் புக்கு உள்ளாக்கப்படுகின் றன. அந்த வகையில் 260 மில்லியன் மக்கள் பன்னாட் டளவில் பாதிக்கப்படுகின் றனர்.
சமுதாயத்தில் மக்களைப் பிரிக்கின்ற ஜாதீய பாகுபாடுகள் மதம் மற்றும் தனிப்பட்டவர் களின் நம்பிக்கையைக் கடந்து பன்னாட்டளவில் வேறெங்கும் இல்லாததாக உள்ளது. வர்கடேவின் அறிக்கையில் ஜாதிய பாகுபாடுகளால் விளையக் கூடிய பாதிப்புகள் பெரு மளவில் இந்தியாவில் இருந்துவருவதால் இந் தியாவை மய்யப்படுத்தியே ஜாதீய பாகுபாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உள்ளன என்று அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.
தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்படும் கொடுமை!
இந்தியாவில்  ஜாதி அமைப்பு முறையில் ஜாதிப் பாகுபாடுகள் நீண்ட காலமாக வேரூன்றி உள் ளன.  அதிலும் தாழ்த்தப் பட்டவர்கள் ஒதுக்கப்பட் டவர்களாக அல்லது தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்.
2005ஆம் ஆண்டிலி ருந்து 2010ஆம் ஆண்டு வரை 4,724 கொலைகள், 11,678 பாலியல் வன் செயல்கள் மற்றும் 2,17,077 வன்கொடுமைகள் ஆகிய கொடுமைகள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிராக ஜாதியின்பேரால் நடந்துள் ளதாகப் புள்ளிவிவரத் தக வல்கள் தெரிவிக்கின்றன.
பன்னாட்டளவில் மனித உரிமைகளில் பன் னாட்டு மனித உரிமைச் சட்டத்தின்கீழ் தவிர்க்கப் பட வேண்டியதாக ஜாதீய அடிப்படையிலான பாகு பாடுகள் இருக்கின்றன என்பதை ஏராளமான அய்.நா. பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். மனித உரிமைகளுக்கான செயல் களில் ஜாதீய பாகுபாடு களில் மனித உரிமை பறிப்பையும் உள்ளடக்கி, கவனத்தில் கொள்ள வேண்டும்.
2009ஆம் ஆண்டில், அய்.நா மனித உரிமைக் குழு செய்கின்ற வேலை யின் அடிப்படையில் பாகு பாடுகள் மற்றும் பணியின் தன்மை மற்றும் அதனடிப் படையில் ஒடுக்குதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டது.
அவ்வறிக்கையில் பணியின் அடிப்படையில் பாகுபாடுகள் மற்றும் ஒடுக்குதல்களைக் களை வதுகுறித்து திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பன்னாட்டு சமூகம் அவ் வறிக்கையை இனிமேல் தான் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும்.
அய்.நா.வில் அறிக்கை
பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியம், அய்.நா மனித உரிமைகள் குழு, 28ஆவது அமர்வில் ஒன்பதாம் தீர்மானமாகிய பொது விவாதம் எனும் தலைப்பிலான தீர்மானத் தின்கீழ், பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றி யத்தின் சார்பில் வர்கடே வாசித்தளித்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ள தாவது:
அய்.நா. பொதுச்செய லாளர் பான்கிமூன் கூறும் போது, மனித உரிமை மீறல்களினால் பாதிப் படைந்தவர்களை மனித உரிமைகள் குழு நேரில் காண வேண்டும். அவர் களுககான அமைப்பாக துடிப்பாகச் செயலாற்ற வேண்டும் என்று கூறி யுள்ளார்.
அவர் கூறியுள்ள கருத் தின்படி, மனித உரிமைகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும்வகையில் 250 மில் லியன் தாழ்த்தப்பட்டவர் கள் இன்னமும் ஒதுக் கப்பட்டவர்களாகவும், துன்புறுத்தப்படுபவர் களாகவும் இந்தியாவில் இருக்கிறார்கள். பாதுகாப்பு அரணாக அரசமைப்பு சட்டம் இருந்தபோதிலும் இந்நிலை இந்தியாவில் இருந்துவருகிறது.
1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அய்.நா. குழு இனரீதியி லான பாகுபாடுகள் இருக் கக்கூடாது என்று அறி வுறுத்தி இருந்தது.
இந்தியாவில் ஜாதிப் பாகுபாடுகள்
இந்தியாவில் பொது இடங்கள், கல்வி நிறுவனங் களில் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று இருப்பதை நீக்குவது என்கிற சிந் தனையை ஏற்படுத்தியது. ஏறக்குறைய 20 ஆண் டுகள் கழிந்த பின்னர் எவ் விதத்திலும் மாற்றமில்லா மல் ஜாதீய பாகுபாடுகள்  பரவலாக உள்ளன.
3000 ஆண்டுகளாக இந்த ஜாதிய முறையிலான பாகுபாடுகள் கிராமங் களில் இருப்பது மட்டு மன்றி, நகரங்களிலும் அப் படியே பின்பற்றப்பட்டு வரும்நிலை உள்ளது.
இந்தியர்களுக்கு முக்கிய சவாலாக இருப்பதும், இந்தியர்கள் தகர்த்தெறி வார்களா? என்பதுமாக இருந்துவருவது இந்த ஜாதித் தடைகள்தான் என்று அண்மையில் மனித உரிமைகளுக்கான ஆணை யராக இருந்தவரான நவிப் பிள்ளை கூறியிருந்தார்.
4724 கொலைகள்
தேசிய குற்ற ஆவணக் கழகத்தின் தகவல்களின் படி, 2005ஆம் ஆண்டிலி ருந்து 2010ஆம் ஆண்டு வரை 4,724 கொலைகள், 11,678 பாலியல் வன் செயல்கள் (5 மணி நேரத் தில் ஒரு பாலியல் வன் செயல்கள் நடக்கின்றன) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கலவரம், தாக்குதல், கடத்தல் மற்றும் தாழ்த்தப்பட்ட பெண் களை நிர்வாணமாக்கி வீதிகளில் விரட்டியது உள்ளிட்ட மோசமான குற்றச் செயல்கள் குறித்து 2,17,077 வன்கொடுமைகள் வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தியாவில் ஒருவ ருக்கு ஒரு வாக்கு என்கிற சமத்துவத்தை அரசிய லில்மட்டும் பின்பற்றுகி றார்கள். ஆனால், சமூக மற்றும் பொருளாதாரத் தில் அந்த சமத்துவத்தைப் பின்பற்ற மறந்துவிட்டார் கள். ஜாதி என்கிற சுவ ருக்குப்பின்னால் உள்ள வர்களுக்கு என்று எவ்வி தத்திலும் பெருமை இல்லை.
அம்பேத்கர், எவ்வளவு காலத்துக்கு வாழ்வில் இவ்வித முரண் பாடுகளைக்கொண்டு வாழ்வது? எவ்வளவு காலத்துக்கு சமூக மற்றும் பொருளாதாரத்தில் சமத் துவத்துவம் இல்லாமல் இருப்பது? இவ்விதமான அபாயகரமான நிலை களில்தான் எங்களின் அரசியல் ஜனநாயகத்தில்  எங்களால் இயன்றதைச் செய்துவருகிறோம் என்று கூறினார். அவர் கேட் டதையே நானும் கேட் கிறேன். _
இவ்வாறு  பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் சார்பில் வர்கடே வாசித் தளித்துள்ள அறிக்கையில் யோகேஷ் வர்கடே குறிப்பிட்டுள்ளார்.
http://iheu.org/iheu-calls-out-india-at-un-on-caste-based-discrimination/

Read more: viduthalai.in/

கருத்துகள் இல்லை: