செவ்வாய், 7 ஏப்ரல், 2015

அ.தி.மு.க தலைமை நிர்ணயித்த கலெக்ஷன் கோட்டா/Target! அமைச்சர் விஜயபாஸ்காரால் மேலும் ஒரு அதிகாரி தற்கொலை முயற்சி ...

அமைச்சர் விஜயபாஸ்கர் துன்புறுத்தலால் மருத்துவர் நேரு தற்கொலைக்கு முயன்றதாக வரும் செய்திகள் கவலைக்குறியது : ஸ்டாலின் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவ பேராசிரியரும், அரசு மருத்துமனையில் ஆர்.எம்.ஓ. பொறுப்பு பதவியில் வகிக்கும் மருத்துவர் நேரு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருப்பது தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தன் முகனூல் வாயிலாக கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூலில், ‘’ வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் அறிவொளி தற்கொலைக்குப் பிறகு இப்போது திருச்சி அரசு பொது மருத்துமனை அசோசியேட் ப்ரபஸர் நேரு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.


திருச்சி அரசு மருத்துமனையின் ஆர்.எம்.ஓ பொறுப்பிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஊழியர்கள் கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமல் நேரு இப்படி தற்கொலை செய்து கொள்ள முனைந்தார் என்று வந்துள்ள செய்திகள் கவலைக்குறியதாகவும், வேதனையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. சட்டவிரோதமான காரியங்களைச் செய்ய சொல்லி நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதில் இந்த அரசாங்கத்தில் அதிமுக அமைச்சர்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிப் போய் விட்டார்கள். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவது, அமைச்சர்களின் குற்றங்களை மறைப்பது போன்றவற்றிற்காக அ.தி.மு.க. ஆட்சியின் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் செயல்படுகிறது.

அது மட்டுமின்றி, அ.தி.மு.க. தலைமை தங்களுக்கு "கலெக்ஷன் கோட்டா" நிர்ணயம் செய்திருக்கிறது என்றும், அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் பணம் வசூல் பண்ணச் சொல்லி அதிகாரிகளை கட்டாயப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அ.தி.மு.க. பண வசூல்ஆசை நிறைவேறும் முன்பு இன்னும் எத்தனை நேர்மையான அதிகாரிகள் தங்களின் உயிர்களை இழக்க வேண்டும்?’’என்று தெரிவித்துள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: