ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

தம்பிதுரை:தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல்! இப்போதே வென்றுவிட்ட குஷியில் நமக்கு வாய்த்த.....

சட்டசபைத் தேர்தல், எந்த நேரத்திலும் வரலாம்; அதனால், தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி, கட்சியினரை தேர்தலுக்கு உசுப்பி உள்ளார்.தமிழக சட்டசபை பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் இருக்கிறது.ஆனால், தங்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதால், சட்டசபையை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தலை நடத்தும் யோசனையில், ஜெயலலிதா இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான், இரு மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., தரப்பில் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, கட்சியினர் தேர்தலை நோக்கி படு வேகமாக முடுக்கி விடப்பட்டனர்.இவர்)(பன்னீரு)   போட்ட கணக்கொன்று  அவர்(ஜெயா)  போட்ட கணக்கொன்று  இரண்டுமே தவறானது, இருவரும்  நிரந்தர மக்களின் முதல்வர் என்பதே  முடிவானது ?
சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், நடந்து முடிந்துள்ளது; எந்த நேரத்திலும், தீர்ப்பு வெளியாகலாம்.

இதுகுறித்து, அ.திமு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா, சென்டிமென்டின் மீது அதீத நம்பிக்கை உள்ளவர்; அவர், 2015ம் ஆண்டு, தனக்கு சாதகமான ஆண்டு என, நம்புகிறார். தீர்ப்பு எப்படி இருந்தாலும், இந்த ஆண்டே தேர்தலை சந்தித்து விட வேண்டும் என்பது தான், ஜெ.,வின் எண்ணம். அதை, கட்சியின் மூத்த தலைவர்களிடம் சொல்லி, கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்தச் சொல்லி விட்டார்.

வேகமாக...:

அந்த அடிப்படையில் தான், திருச்சிக்கு அருகில் மண்ணச்சநல்லுாரில் நடந்த, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, லோக்சபா துணை சபாநாயகர் தம்பி துரை, 'சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்; கட்சியினர் தயாராக இருக்க வேண்டும்' என, சொல்லி இருக்கிறார்.இதே கருத்தை, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வேகமாக பேசத் துவங்குவர்.இவ்வாறு, அக்கட்சியினர் கூறினர்.

234 தொகுதிகளிலும்... :

இது தொடர்பாக, தம்பிதுரை கூறியதாவது:சமயநல்லுாரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், நேற்று முன்தினம் கலந்து கொண்டு பேசினேன். கட்சியில் புதிய பொறுப்புக்கு வரும் நீங்கள், எந்த நேரத்திலும், தேர்தலை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என, தேர்தலுக்காக, அவர்களை உற்சாகப்படுத்தி, உசுப்பிவிடும் வகையில் தான் பேசினேன். லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற நாம், சட்டசபைத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றும் சொன்னேன்.எந்த நேரத்தில் தேர்தல் நடந்தாலும் என பேசியது, உடனே, தேர்தல் நடக்கப் போகிறது என்ற அர்த்தத்தில் அல்ல. எப்போது தேர்தல் நடந்தாலும், அதை எதிர் கொள்ள, நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் தினமலர்.com

கருத்துகள் இல்லை: