சனி, 11 ஏப்ரல், 2015

அக்ரி கிருஷ்ணமுர்த்தியை சந்தித்து பேச ஜெயில் வார்டன்களுக்கு தடை! ரகசியங்களை பாதுக்காகவாம்?

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச ஜெயில் வார்டன்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அதிகாரிகளின் நெருக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது பாளையங்கோட்டை சிறையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விசாரணை கைதிகளையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் தண்டனை கைதிகளையும் அவர்களது உறவினர்கள் சந்தித்து பேச முடியும். எல்லா நாட்களிலும் வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி உண்டு. அதனால், சிறையில் இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவரது வழக்கறிஞர் தினமும் சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில், சிறையில் உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வார்டன்கள் பேச சிறை நிர்வாகம் திடீர் தடை விதித்து உள்ளது. அதன்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் நெருங்கி பேச வேண்டாம் என்று வார்டன்களுக்கு ரகசிய உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தேவையில்லாமல் ரோந்து சென்று அவரை கண்காணிக்க வேண்டாம் எனவும், அவருக்கு பொருட்கள் எதுவும் வாங்கி கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொறியாளர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இதுவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. அவரது வழக்கறிஞர் தினமும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடுத்த வாரம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது விகடன்.com

கருத்துகள் இல்லை: