ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

கொழும்பு ஹோட்டலில் இந்திய தம்பதிகள் தற்கொலை! காசினோ தோல்வியால் என சந்தேகம்?


இந்தியத் தம்பதியர் சட­ல­மாக மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை: வெள்­ள­வத்தை 40 ஆவது ஒழுங்கை தனியார் ஹோட்டல் ஒன்­றுக்குள் சட­ல­மாக மீட்­கப்­பட்ட இந்­திய தம்­ப­தி­யர் கெசினோ சூதாட்­டத்தில் ஏற்­பட்ட பல லட்ச ரூபா நட்டம் கார­ண­மாக தற்­கொலை செய்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிப்­ப­தாக வெள்­ள­வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்­தினம் இரவு பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லின்­படி மீட்­கப்­பட்ட குறித்த இந்­தி­யர்கள் இரு­வ­ரி­னதும் மரணம் குறித்து வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லரின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் விஷேட விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த விடயம் தெரிய வந்­துள்­ளது.
இந்­தி­யாவின் தமிழ் நாடு சென்­னையை சேர்ந்த 28 வய­தான மகாலக்ஷ்மி என்ற 6 மாத கர்ப்­பி­ணியும் அவ­ரது கண­வ­ரான 31 வய­து­டைய துட்­விராம் பொட்தா ஆகி­யோரே இவ்­வாறு சட­ல­மாக மீட்கப்பட்டுள்­ள­தா­கவும் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உதய குமார முட்ளர் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் தங்­கி­யி­ருந்த அறை­யி­லி­ருந்து கிடைத்த தட­யங்­களின் படியும் ஆரம்­பக்­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­க­ளிலும் குறித்த மரணம் தற்­கொலை என தெரிய வந்­துள்­ள­தாக வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உதய குமார கேச­ரிக்கு தெரி­வித்தார்.
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இந்த தம்­ப­தி­யினர் சுற்­றுலா விசாவில் இலங்கை வந்­துள்­ளனர். அவ்வாறு இலங்கை வந்­துள்ள இவர்கள் வெள்­ள­வத்தை 40ம் ஒழுங்­கை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்றில் 4ஆவது மாடியில் அறை­யெ­டுத்து தங்­கி­யுள்­ளனர்.
இந்த தம்­ப­தி­யினர் இரவு நேர களி­யாட்ட விடு­திகள் கெசினோ விளை­யாட்­டுக்­களில் அதிக ஈடு­பாடு காட்டி வந்­துள்ள நிலையில் கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள கெசினோ நிலையம் ஒன்றில் தொடர்ச்­சி­யாக கஸினோ சூதாட்ட விளை­யாட்டில் ஈடு­பட்டு வந்­துள்­ளனர்.
சுற்­றுலா விசாவில் இலங்கை வந்த இவர்கள் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்­கான கட்­ட­ணத்தை குறித்த கெசினோ நிலை­யமே செலுத்­தி­யுள்ள நிலையில் அங்­கி­ருந்து கெசினோ விளை­யாட்­டுக்­க­ளுக்குச் செல்­வ­தற்­கான போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளையும் அந்­நி­லை­யமே செய்து கொடுத்­துள்­ளது.
கடந்த புதன்­கி­ழமை ஹோட்­டலில் இருந்து கெசினோ விளை­யாட சென்ற தம்­ப­தி­யினர் மீண்டும் அன்றைய தினம் இரவு வேளையில் அறைக்கு திரும்­பி­யுள்ள நிலையில் நேற்று முன்­தினம் மாலை வரை அவர்கள் அறை­யி­லி­ருந்து வெளியே வராத தால் எவ்­வித நட­மாட்­டமும் அவ­தா­னிக்­கப்­ப­டாத நிலையில் சந்­தேகம் கொண்ட ஹோட்டல் நிர்­வாகம் தம்­ப­தி­யினர் தங்­கி­யி­ருந்த அறை­களை சோதனை செய்­துள்­ளனர்.
இதன் போது குறித்த தம்­ப­தி­யி­னரின் வாயி­லி­ருந்து நுரை தள்ளி விழுந்து கிடப்­பதை அவர்கள் அவதானித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து வெள்­ள­வத்தை பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­ப­டவே பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்குப் பொறுப்­பான பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நாக­ஹ­வத்த தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் அங்கு சென்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.
இதன் போது அவர்­க­ளது அறை­யி­லி­ருந்து நஞ்­சூட்­டப்­பட்ட குளிர்­பானம் அடங்­கி­ய­தாக சந்தேகிக்கப்பட்ட போத்­தல்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
இந்­நி­லையில் நேற்­றுக்­காலை கல்­கிசை பிர­தான நீதிவான் எம்.எம்.சஹாப்தீன் ஸ்தலத்தை பரிசோதித்த­துடன் களு­போ­விலை போதனா வைத்­தி­ய­சா­லையின் உதவி சட்ட வைத்­திய அதி­காரி சஞ்சீ­வவும் பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்­தார்.
பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரும் நேற்­றைய தினம் விசேட தடையம் சேக­ரிக்கும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தனர்.
இதன் போது குறித்த இந்­திய தம்­ப­திக்கு சொந்­த­மான கடவுச் சீட்­டுக்கள் பொருட்கள் அந்த அறையில் அப்­ப­டியே காணப்­பட்ட நிலையில் 6 மாத கர்ப்­பி­ணி­யான பெண்ணின் உடலில் கழுத்து வரை போர்வை ஒன்றால் போர்த்­தப்­பட்­டி­ருந்­தது.
அத்­துடன் அவரின் கணவர் அதன் அருகே விழுந்து கிடந்தார். இந்­நி­லையில் இது­வரை மேற்­கொள்ளப்பட்ட விசா­ர­ணை­களில் தற்­கொலை செய்து கொண்­ட­மைக்கு கசினோ விளை­யாட்டில் ஏற்பட்ட பாரிய நிதி­யி­ழப்பு கார­ண­மாக இருக்­கலாம் என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.
எவ்­வா­றா­யினும் இந்த மர­ணங்கள் தற்கொலைதானா ? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள சட்ட வைத்திய அதிகாரியின் உதவி நாடப்பட்டுள்ளது.
அதன்படி களுபோவில போதனா வைத்தியசாலையில் இந்த தம்பதியினரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்காக நேற்று முற்பகல் அவர்களின் சடலங்கள் அங்கு எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர். இலக்கியா.இன்போ

கருத்துகள் இல்லை: