ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சகாப்தம் படத்தில் விஜயகாந்த்:பணம் பணம்னு ஓடினவங்க எல்லாரும் ஜாமீன் கிடைக்காம வீட்ல உக்காந்திருக்காங்க

சுரேந்திரன் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிமுகாகும் திரைப்படம் சகாப்தம். நேஹா ஹிங்கே, ஷுப்ரா ஐயப்பா ஹீரோயின்களாக நடிக்க, தேவையானி, ரஞ்சித், ஜெகன், பவர் ஸ்டார், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.தமிழகத்தின் தென்மாநிலத்திலுள்ள சிறு கிராமத்தில் வசிக்கும் ஹீரோ சண்முகபாண்டியன் ஜெகனுக்கு நல்ல நண்பனாகவும், மாமா மகளுக்கு நல்ல காதலனாகவும் அப்பாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். சண்முகபாண்டியனின் மாமா பவர்ஸ்டார் மலேசியாவில் 5 ஸ்டார் ஹோட்டலில் பணிபுரிபவர். ‘ஊருக்கு வாடா மாப்ள. நான் பாத்துக்குறேன்’ என்ற அவரது பேச்சை நம்பி மலேசியா செல்ல முடிவெடுக்கிறார் சண்முகபாண்டியன். 
தேவயானியின் கணவர் ரஞ்சித் மலேசியா செல்ல வாங்கியிருந்த கடனை  திரும்ப கொடுக்காததால் போஸ் தேவயானியை மானபங்கப்படுத்த முயற்சிக்க அவரை காப்பாற்றுகிறார் சண்முகபாண்டியன். ரௌடிகளை வைத்து சண்முகபாண்டியனை மிரட்டி மன்னிப்பு கேட்கச் சொல்ல ‘மன்னிப்பு! என் பரம்பரைக்கே புடிக்காத ஒரே வார்த்தை’ என்ற பஞ்ச் வசனத்துடன் வில்லன் டீமை உருட்டி பொரட்டி பந்தாடுகிறார் சண்முகபாண்டியன். எத்தனை நாள் உங்களுக்கு பாரமாக இருப்பது, நான் சம்பாதிக்கவேண்டிய நேரம் வந்துடுச்சு என அப்பா செண்டிமெண்டுட்டனும், மலேசியாவிற்கு சென்று ரஞ்சித்தை எப்படியாவது கண்டுபிடிக்கிறேன் என அக்கா செண்டிமெண்டுடனும், என்ன விட்டா உனக்கு யார்ரா இருக்கா என்று ஜெனகனையும் உடன் அழைத்துச் செலவதாகக் கூறி நண்பன் செண்டிமெண்டுடனும் மலேசியாவுக்கு பயணமாகிறார் சொக்கத்தங்கம் சண்முகபாண்டியன்.மலேசியா சென்று இறங்கியதிலிருந்து வொர்க் பர்மிட்டில் ஏமாற்றம், பவர்ஸ்டாரின் பொய் புரட்டு, சரியான வேலை கிடைக்காமல் திண்டாட்டம் என அல்லல்படும் சண்முகபாண்டியன் பெண்களை ஏமாற்றும் ஒருவனை பிடிக்க போலிஸுக்கு உதவுகிறார். அவரது திறமையை பாராட்டி மற்றொரு ஹீரோயினான ஷுப்ரா தனது டிடக்டீவ் ஏஜென்ஸியில் அவர்களுக்கு வேலை போட்டு கொடுக்கிறார்கள்.


தொடர்ந்து பெரிய பெரிய கேஸ்களை தனது ஆவேச சண்டைகளால் பிடித்துவிடும் சண்முகபாண்டியன் ரஞ்சித்தையும் கண்டுபிடிக்கிறார். அவர்மூலமாக மருந்துகம்பெனியில் தமிழர்கள் பலர் அடிமையாக கிடப்பதாகவும், அந்த மருந்து கம்பெனி இந்தியாவை நாசமாக்க திட்டமிடுவதாகவும் அறியும் சண்முகபாண்டியன் அவர்களை தடுக்க களத்தில் இறங்குகிறார். விறுவிறு சண்டை காட்சிகளுடன் நகரும் க்ளைமேக்ஸில் கேப்டன் வருகிறாரே அந்த கடைசி 5 நிமிடம். வானவேடிக்கை தான். 

ஆங்காங்கே சம்மந்தமில்லாமல் வெட்டப்பட்ட காட்சிகள், சுத்தமாக பொருந்தாத லிப் மூவ்மெண்ட் காட்சிகள்(ஹீரோயின்களுக்கு மட்டும்) தான் படத்தின் மைனஸ். விஜயகாந்தின் பழைய படங்களின் சாயல் தான் சகாப்தம். தமிழகத்திலிருந்து சென்று மலேசிய கவர்மெண்ட் கையில் அவார்ட் வாங்கி இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்களை கைகளாலே அடித்து பிழிந்து தமிழர்களை மீட்கும் கதை.



முழுக்க முழுக்க விஜயகாந்தை திருப்திபடுத்தவே கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அமர்த்தலான திரைக்கதையால் படம் பலம்பெறுகிறது. கடைசியில் கேப்டன் எண்ட்ரி கொடுத்து பேசுகிறாரே ஒரு வசனம். யோசிக்க வேண்டிய விஷயம் தான். ‘பணம் பணம்னு பணத்த தேடி ஓடினவங்க எல்லாரும், இப்போ ஜாமீன் கிடைக்காம வீட்ல உக்காந்திருக்காங்க’ என்ற வசனத்தை விஜயகாந்த் தவிர படங்களில் வேறு யாரால் பேசமுடியும். 

சண்முகபாண்டியன் முதல் படத்திலேயே அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நடிப்பு, டான்ஸ், சண்டைக்காட்சிகள் என எல்லாவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராய் இருக்கிறார். அதிலும் சண்டைக் காட்சிகள் தான் நன்றாக கைகொடுக்கின்றன. எல்லா வில்லனும் சிக்ஸர் தான். அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறந்த இயக்குனர்களுடன் சேர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து திரையுலகில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சகாப்தம் - முதல் பந்தே சிக்ஸர்! nakkheera.in

கருத்துகள் இல்லை: