ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

அமெரிக்க நீதிமன்றம் அதிரடி! யோகாவுக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை! பள்ளிகளில் யோகா கற்பிக்கலாம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பள்ளிகளில் கற்பிக்கப்படும் யோகா, மாணவர்களுடைய மத சுதந்திரத்தை எந்த வகையிலும் பாதிக் காது என்றும், யோகாவுக்கும் மதத்துக்கும்  சம்பந்தம் இல்லை என்றும், அமெரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு பள்ளிகளில், யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இதில், ஏராளமான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். பாரம்பரிய உடற்பயிற்சி வகுப்புகளில் பங்கெடுக்க விரும்பாதவர்களுக்கு, யோகா  வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகளில் யோகா கற்பிக்கப்படுவதற்கு எதிராக, சான் டீகோ நீதிமன்றத்தில் 2 மாணவர்களின் பெற்றோர் மனு  தாக்கல் செய்தனர். என்சினிடாஸ் மாவட்ட பள்ளிகளில், யோகா என்ற பெயரில் இந்து மற்றும் புத்த மதத்தின் போதனைகள் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது.


யோகா நிகழ்ச்சிகள் தெய்வீகம் சம்பந்தப்பட்டவை. எனவே இவை சட்டத் துக்கு உட்பட்டவை அல்ல. மாணவர்களின் மத சுதந்திரத்தை பறிக்கும் வகை யில்  யோகா இருக்கிறது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: யோகா பயிற்சி வகுப்புகள் சில  இடங்களில் மதம் சார்புடையதாக இருக்கலாம். ஆனால், என்சிடாஸ் மாவட்ட பள்ளிகளில் கற்பிக்கப்படும் யோகாவுக்கும், மதத்துக்கும் சம்பந்தம் இல்லை. இது,  மாணவர்களின் மத சுதந்திரத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது நம்முடைய அரசியலமைப்புக்கு விரோதமானதும் அல்ல. இவ்வாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் வலியுறுத்தலை தொடர் ந்து, ஆண்டு தோறும் ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று,  ஐநா சபை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. dinakaran.com

கருத்துகள் இல்லை: