செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்க, வரும் 15-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பவானி சிங் நடுநிலையாக செயல்படவில்லை. எனவே அவரை நீக்கிவிட்டு, அரசு தரப்பில் வாதாட வேறு வழக்கறிஞரை நியமிக்கும் வரை ஜெயலலிதா வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், பானுமதி கொண்ட அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் அர்ஜூனா, சண்முகசுந்தரம் ஆகியோரும், ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், துள்சி ஆகியோரும் ஆஜராகி வாதாடினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அன்பழகன் மனு மீதான தீர்ப்பு வரும் 15-ம் தேதி வழங்கப்படும் என்றனர்.
மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை 15-ம் தேதி வரை வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அதிமுகவினர் அதிர்ச்சி:
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படலாம் என அதிமுகவினர் எதிர்பார்த்து வந்த நிலையில், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லியிலும், பெங்களூருவிலும் அதிமுக வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளன  /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: