புதுடெல்லி, பிப். 14-
டெல்லி சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பதற்காக ஆளுநரை சந்திக்க உள்ளார்.
இதையொட்டி ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர், டெல்லியின் அனுமன் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இரவு 8 மணியளவில் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த தகவலை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:-
ஜன் லோக்பால் மசோதாவை ஆதரிக்காமல் காங்கிரசும், பா.ஜனதாவும் எதிர்த்து வருகின்றன.
எரிவாயு விலை நிர்ணயம் விவகாரத்தில் ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதால் காங்கிரசும், பா.ஜனதாவும் நெருக்கடி தந்ததுடன், ஜன் லோக்பால் மசோதாவை தடுக்கின்றன. இந்த மசோதாவிற்காக தெருவில் இறங்கி போராடுவோம். நமது அரசைக் காப்பாற்றுவதற்காக வரவில்லை. ஆனால், ஊழலில் இருந்து நாட்டைக் காப்பாற்றவே வந்துள்ளோம். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் குடிநீர் மற்றும் மின்சார கட்டணங்களை குறைத்துள்ளோம். ஜன் லோக்பால் மசோதாவுக்காக 100 முறை கூட ராஜினாமா செய்வேன்.maalaimalar.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக