யுவன் மதம் மாறிய பின்னணி பற்றி அவரது நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது நமக்கு கிடைத்த சில தகவல்கள் இதோ...
சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் இல்லற வாழ்வு யுவனுக்கு சோகமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். 2005ம் ஆண்டு தனது நீண்டகால தோழியான சுஜாயா என்ற பெண்ணை மணந்து கொண்டார் யுவன். ஆனால் இந்த வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் தான் நீடித்தது. 2007ம் ஆண்டே இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு 2011ம் ஆண்டு ஷில்பா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களது திருமண வாழ்வு நன்றாக சென்று கொண்டு இருந்தது. இப்போது அந்த திருமண உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பெண் இப்போது தனது அம்மாவுடன் லண்டன் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இளையராஜா அவர்களே மதங்களுக்கு வெளியே தான் ஆத்மீகமே இருக்கின்றது இனியாவது பார்பனீயத்திற்கு ஒத்து ஊதாவேண்டாமே ?
இதற்கிடையே யுவனின் தாயாரும் மரணம் அடைய, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் சினிமாவில் கூட முன்பு போல் அவரால் சரியாக பாடல்களை கூட கொடுக்க முடியாமல் போனது.
3வது திருமணத்திற்காக மதம் மாற்றம்? இந்த நிலையில் யுவன், சமீபத்தில் சிங்கப்பூரிலோ, மலேசியாவிலோ ஒரு பெரிய பணக்கார இஸ்லாம் வீட்டை பெண்ணை பார்த்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பிடித்து போக, திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், மூன்றாவது திருமணம் செய்யபோகும் பெண்ணிற்காகத்தான் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வீட்டில் எதிர்ப்பு! யுவனின் இந்த செயலுக்கு அவரது அப்பா இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், சினிமா மற்றும் பிறதுறை நண்பர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமக்கும், நமது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று எவ்வளவோ சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்துள்ளார்.
இளையராஜா வெளியேற்றம்? எவ்வளவு சொல்லியும் யுவன் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் ஒருகட்டத்தில் இளையராஜா வெறுப்படைந்து தி.நகரில் உள்ள தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி சிலகாலம் தனது மூத்தமகன் கார்த்திக் ராஜாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறகு யுவன் வந்து பேச, தான் மட்டும் வரமாட்டேன் என்று சொல்லி கார்த்திக்கையும் தன்னோடு அழைத்து வந்து பிறகு எல்லோரும் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இதேப்போன்று இளையராஜா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் கொலு வைத்து பிரபல பின்னணி பாடகர்களை எல்லாம் அழைத்து தன் வீட்டில் பாட வைப்பார். ஆனால் சென்றாண்டு கொலு நடத்த கூடாது என்று யுவன் தெரிவித்துள்ளார். பின்பு கொலுவை தவிர்க்கும் நோக்கோடு அவசரமாக மும்பை கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இளையராஜா போனில் சத்தம் போட பிறகு அவசரஅவசரமாக மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
குரான் பரிசளித்த அமீர்? ; யுவன் மதம் மாறிய பின்னர், அவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை பிரபல இயக்குநர் அமீர் பரிசளித்துள்ளதாகவும், தற்போது அந்த குரானை தான் யுவன் தினமும் படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. யுவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகவே இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருகிறாராம். அவர்கள் மத வழக்கப்படி தினமும் 5 வேளை தொழுகை செய்தவதையும் கடைபிடித்து வருகிறாராம். dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக