சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியா, பாஜக அணியா என்று டேக்கா காட்டிய தேமுதிக தலைவர் விஜய்காந்த், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக-இடதுசாரிகள், திமுக- விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய தேசிய முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும், பா.ஜ.க- ம.தி.மு.க ஆகியவையும் இதுவரை கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய்காந்த் திட்டம்?: 14ம் தேதி பிரதமருடன் சந்திப்பு பாஜக கூட்டணிக்கு பாமக வருமா என்பதும், பாஜக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்பதும் தான் இப்போதைய ஹாட் டாக்.
இந்த இரு கட்சிகளின் முடிவை வைத்தே இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டியா அல்லது 4 முனைப் போட்டியா அல்லது 5 முனைப் போட்டியா என்பது இறுதியாகும். காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்தக் கட்சி விஜய்காந்தை வளைக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தன்னை திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளும் இழுக்க முயல்வதால் முதலில் திமுகவை தாக்கி கூட்டணி இல்லை என்ற நிலையை விஜய்காந்த் தரப்பு உருவாக்கியது. அடுத்ததாக பாஜகவை தொங்கலிலேயே வைத்துக் கொண்டு காங்கிரஸ் தரப்புடன் தீவிர பேச்சு நடத்தி வருகிறது தேமுதிக என்கின்றனர். பாஜகவிடம் அதிகபட்ச தொகுதிகளைக் கேட்டு அவர்களை அலற வைத்த கேப்டன், இப்போது தனது பார்வையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளதாகத் தெரிகிறது. தே.மு.தி.கவை காங்கிரஸ் இழுக்கத் தொடங்கியுள்ளது என்கின்றார்கள். tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக