சென்னை: திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய
பெட்ரோலியத்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி
இன்று சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசம்பர் 15ம் தேதி கூடிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில்
காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேமுதிகவுடன் கூட்டணிக்கு திமுக தீவிரமாக முயன்றது. ஆனால்,
அந்தக் கூட்டணி உருவாகவில்லை.
இந் நிலையில் திமுக தரப்பில் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரின்
முன்னெடுப்புகள் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சென்னை
வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு
நடத்தினார். ஆனால், கருணாநிதி எந்த உறுதிமொழியும் தரவில்லை. தேர்தலுக்குப்
பின் பார்க்கலாம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.
இதற்கிடையே விஜய்காந்தை இழுக்க பாஜகவுடன் காங்கிரசும் தீவிரமாக முயன்று
வருகிறது. அத்தோடு திமுகவையும் எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர
காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று அல்லது நாளை வீரப்ப மொய்லி சென்னை வந்து
கருணாநிதியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக