கேடுவிளைவிக்கும் தனியார் குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும்: த.வெள்ளையன் கோரிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடலூர்
மாவட்டத்தில் சமீபத்தில் தனியார் கம்பெனி தயாரிப்பான குளிர்பானத்தை
குடித்த சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் அபிராமி (வயது 9) என்ற சிறுமி இறந்துவிட்டார்.
இன்னும்
சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வப்போது கூட
கோக், பெப்சி போன்ற தனியார் குளிர்பானங்களில் கரப்பான் பூச்சி, ஈ, எறும்பு
போன்றவை காணப்பட்டு வருகிறது. இதிலிருந்து இத்தகைய குளிர்பானங்கள்
சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்படுவது இல்லை என்பது தெளிவாக
தெரியவருகிறது.
மேலும்
இத்தகைய குளிர்பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ‘மாலத்தியான்’
எனும் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படுகிறது. லாபநோக்கம் ஒன்றே
குறிக்கோளாக கருதி, மக்கள் நலனில் அக்கறை காட்ட தவறி வருகிறார்கள்.
எனவே
இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்காது தமிழ்நாட்டில் கேடுவிளைவிக்கும் இத்தகைய
நச்சுப்பானங்களை உடனடியாக தடை செய்திட வேண்டும் என்று முதல்- அமைச்சர்
ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறேன். மேலும் வணிகர்களும் இது போன்ற
நச்சுப்பானங்களை பயன்படுத்தாமல் கைவிட வேண்டும். அது நம் கடமையும் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக