வியாழன், 13 பிப்ரவரி, 2014

வர்த்தகர்களை மிரட்டி ஆண்டுக்கு ரூ.140 கோடி பறிக்கும் மாவோயிஸ்ட்கள்


புதுடெல்லி : தங்களுடைய தீவிரவாத செயல்களுக்காக மாவோயிஸ்ட்கள், வர்த்தகர்கள், நிறுவனங்களை அச்சுறுத்தி ஆண்டுக்கு ரூ.140 கோடி அளவிற்கு பணம் பறிக்கிறார்கள்  என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு பணம் வரும் வழிகளை அரசு கண்காணித்து வருகிறது. புதுடெல்லியில் உள்ள பாதுகாப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தீவிரவாதிகள் பணம் வசூல் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.இதில் சிபிஜ-மாவோயிஸ்ட் இயக்கத்துக்கும், நக்சல் தீவிரவாதிகளுக்கும் வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. போராளிகள் என்று சொல்லப்படும் பலரும் கப்பம் வாங்குவதற்கு தானே போராடினார்கள் ?
சட்டவிரோதமாக பணம் பெறுவதற்காக இந்த இயக்கங்கள் போலி வர்த்தக நிறுவனங்களை நடத்தி வருகின்றன.இவர்கள் ‘டென்டு பட்டா ’ ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்கள், அவற்றின் ஒப்பந்ததாரர்கள், வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து கட்டாய வரி வசூலிக்கின்றனர். மேலும், நக்சல் பாதிப்பு பகுதியில் இருக்கும், சட்டவிரோதமாக செயல்படும் சுரங்கங்களிலிருந்தும் இவர்கள் பணம் பெறுகின்றனர். தனிநபர் மற்றும் பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தல், வங்கிகளை கொள்ளையடித்தல் மூலமும் இவர்கள் தேவையான பணத்தை சேகரிக்கின்றனர். இந்த தீவிரவாதிகள் ஆண்டுக்கு ரூ.140 கோடி அளவுக்கு மற்றவர்களிடம் இருந்து கட்டாயமாக பணம் வசூல் செய்கின்றனர். இவ்வாறு சிங் தெரிவித்தார். .dinakaran.com/

கருத்துகள் இல்லை: