திருச்சி: தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, நுழைவுக் கட்டணமாக, ஆண்களுக்கு, 50 ரூபாயும், பெண்களுக்கு, 20 ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது.
தி.மு.க.,வின், 10 வது மாநில மாநாடு, திருச்சியில், வரும், 15, 16ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து முடிந்துள்ளன. விடுப்பட்ட சில பணிகள் மட்டுமே, தற்போது நடந்து வருகின்றன. மாநாட்டில், பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது. ஐந்து லட்சம் பேர் அமரும் வகையில், பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஆங்காங்கே பிரமாண்ட, எல்.இ.டி., மானிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மோடி மாநாட்டில் ஐந்து ரூபாய் வசூலிக்கிறார்கள் என்று பெருமை பீற்றி கொண்டவர்களே, இப்போது பாருங்கள்
மேடையில், 'ஏசி', ஏர்கூலர் வசதியும், பந்தல் முழுவதும் மின்விசிறி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மின்தேவையை பூர்த்தி செய்ய, 10க்கும் மேற்பட்ட ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி மாநகர் முழுவதும் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில், தி.மு.க., கொடிக்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. பிரமாண்ட விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. கொடி, தோரணங்கள், ராட்சத பலூன்களுடன் திருச்சி நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. மாநாட்டு நிகழ்ச்சிகளை, இரண்டு நாளும் காண, ஆண்களுக்கு, 50 ரூபாயும், பெண்களுக்கு, 20 ரூபாயும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநாடு, 15ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக