சனி, 15 பிப்ரவரி, 2014

Afghanistan காந்தகாரில் வேளாண் பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார் சல்மான் குர்ஷித்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் ஒருநாள் சுற்றுப்பயணமாக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார். இந்திய அரசின் உதவியுடன் காந்தகாரில் அமைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் முதல் தேசிய வேளாண் பல்கலைக்கழகத்தை சல்மான் குர்ஷித்தும், ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாயும்  இன்று திறந்து வைக்கின்றனர்.

மேலும் இந்திய அரசின் நிதி உதவியுடன் காபூலில் ஆப்கன் நாடாளுமன்ற கட்டிடமும், ஹெராட் மாகாணத்தில் சல்மா நீர்மின் அணையும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளையும் அதிபர் கர்சாயுடன் சேர்ந்து சல்மான் குர்ஷித் பார்வையிட உள்ளார்.


ஆப்கானிஸ்தானின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா அளித்து வரும் நிதியுதவி தற்போது 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது. இவ்வாறு ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதன் மூலம் இந்தியா-ஆப்கானிஸ்தானுக்கிடையில் நல்லுறவு மேம்படும் என அதிபர் கர்சாய் தெரிவி்த்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தான் தேர்தலை சந்திக்கவுள்ளது. இருநாடுகளும் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: