புதன், 12 பிப்ரவரி, 2014

.jeyamohan :சமீபத்தில் எதையும் (ஓஷோ) படித்து இவ்வளவு நெகிழ்ச்சியாக உணர்ந்தது இல்லை.


ஒன்றை அறிந்துகொள்ளுதல் ஒரு உயர்வான அனுபவம் , அறிந்தவற்றைப் புரிந்து கொள்ளுதல் இன்னும் மேலான அனுபவம், ஆனால் அறிந்தவற்றையும் அதைப் புரிந்தவற்றையும் உணர்ந்துகொள்ளுதல் ஒரு உன்னதமான அனுபவம் , மிக அபூர்வமாகவே அது கைகூடும், மேலும் இந்த வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமும் நமக்கு மிக அரிதாகவே வாய்க்கும். இந்த வரிகள் அத்தகைய மின்னலெனத் தெறிக்கும் ஒற்றை வரிகள் நிறைய நமக்கு அறிமுகமானவை தான், நம் ஒவ்வொருவர் கைவசமும் அவ்வாறு ஒரு பட்டியல் இருக்கும், ஆனால் மேலுள்ளது போன்ற ஒரு உவமையும் படிமமும் நம்மை ஒரு மானுட உச்ச அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது . இது போன்ற வரிகளுக்காக மேலும் ஏங்க வைக்கிறது .
சிறுகதை, நாவல்கள் நமக்களிப்பது ஒரு மலையேறும் இலக்கிய அனுபவம், திருப்பங்கள் தோறும் புதிய காட்சிகள், ஏற ஏற அடி பரந்துகொண்டே செல்லும் நமது எடையும் கூடிக் கொண்டே செல்லும். கவிதைகள் நமக்களிப்பது ஒரு மின் தூக்கியில் மேல் உயர்வது போன்றது நமக்கு சாத்தியப்படுத்துவது கவிதைக் கணங்களை, எடையை உணர்ந்து கொண்டே சொகுசாக உயரும் அமோக அனுபவம். ஆனால் வாழ்வில் சிலமுறைகள் மட்டுமே நமக்கு ஆன்மிக அனுபவம் வாயக்கப் பெறும், அது ஒரு நேரடி நிகழ்வாகவோ அல்லது ஒரு கலையினூடாகவோ இருக்கலாம். ஒரு சருகாக எடையின்மையை நாம் உணர்ந்து காற்றில் மிதந்து கோபுரக் கலசத்தின் மீது எழுந்து தன்மையாக அமர்தல். மனிதப் பிறவிக்கு சாத்தியமான அதிகபட்ச அனுபவம் இதுவென்றே எண்ணுகிறேன், இதை இவ்வரிகளைப் படிக்கிறபோது அடைந்தேன்.

ஓஷோ என்ற போதே எனக்கு ஒரு முகச் சுளிப்பு, கல்லூரிப் பருவம் முதல் நாளெல்லாம் இவரின் கையாலாகாத வாசகர்களை , தன்னை ஆன்ம சாதகன் என விளம்பிக் கொள்ளும் துணுக்கு ஞானிகளை நிறைய சந்தித்து அவர்கள் மேலுள்ள வெறுப்பு நாளடைவில் எப்படியோ ஓஷோ மீது படிந்து விட்டது. அவரின் ஒன்றிரண்டு நூல்களையே படித்துள்ளேன், ஏற்காத மனச் சாய்விலேயே படித்ததால் எளிதில் புறக்கணித்து விட்டேன்.
தற்பொழுது இந்தத் தலைப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டியது, இந்த சோப்பளாங்கி ஆன்ம வேடதாரிகளைக் கிழிக்கப் போகிறார் என்ற எண்ணம். முதல் பகுதியும் எனக்கு உவப்பாகவே பட்டது, ஆனால் ஒரு மர்மக் கதை போலக் கட்டுரை நகர்ந்து நகர்ந்து அவரை உடைப்பது அசல் ஓஷோவைக் காண்பதற்கே என்று முடித்தது ஒரு பெரும் திருப்பம் , ஆம் ஒரு கிலுகிலுப்பைப் பாம்பு மடிந்து திரும்புவது போல.
dynamite வைத்துக் கட்டிடங்களை வெடித்து அது சீராக சரியும் காணொளிக் காட்சிகள் பார்பதற்கு மிக அழகாக இருக்கும், சரிந்தபின் கட்டிடம் பார்த்தவர் மனதில் மட்டும். அதுபோன்றது இந்த மூன்று கட்டுரைகள் உடைந்து விழும் அழகியல்.
கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ ,
என்னை முதலில் உடைத்த ஒரு மனிதர் ஓஷோ , ஓஷோ புத்தகத்தில் ஒரு உரையில் கிருஷ்ணமூர்த்தி பற்றிய விமர்சனம் இருக்கும் , கிருஷ்ணமூர்த்தி ஒரு ஞானி இல்லை என்று , எது என்னை ஓஷோ பக்கம் வசீகரித்ததோ அதுவே அவரின் ஊடாக கிருஷ்ணமுர்த்தி பக்கமும் வசீகரித்தது,இவர் யார் அவரை ஞானி இல்ல என்று கூறுவது என்று எடுத்தேன் கிருஷ்ணமூர்த்தி புத்தகத்தை ,ஓஷோவின் புத்தகத்தை மடத்தனமாக ஒப்புகொண்டிருந்தால் கிருஷ்ணமூர்த்தி கிடைத்திருக்கமட்டார் , ஒரு இரண்டு வருடம் ஓஷோ தேவைப்பட்டார்,அது ஒரு பரிமாண வளர்ச்சி என்றே சொல்லுவேன் ,ஒரு வயதுவரைக்கும் தாய்ப்பால் தேவை அப்புறம் அது தேவை இல்லை,ஒரு ஒரு கட்டத்திலும் தூண்டுதல்கள், அப்புறம் அவரைப் படிப்பதில்லை அவரை நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை, அவர்மேல் கோபம் கண்டிப்பாகக் கிடையாது ,அவர் கொடுத்த திறப்புகள் இன்னமும் உள்ளன ,அன்றாடக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு தேவைப்பட்ட இயற்கையின் ஒரு மலர்ச்சி என்றே ஓஷோவை நான் கூறுவேன் , உள்வாங்கினேன் , முரணியக்கக் கேள்விகளால் கண்ட தரிசனங்கள் ஏராளம் இழந்ததும் ஏராளம் , யுங் சொல்லுவது போல ” There’s no coming to consciousness without pain ” , அதையே ஜெ கிருஷ்ணமூர்த்திக்கும் சொல்லுவேன் , ஆனால் நான் சிலருக்கு ஜெ கிருஷ்ணமூர்த்தியைப் பரிந்துரைத்துள்ளேன் , ஓஷோவை ஒரு சமநிலை இல்லாத இளைங்கன்றுக்குப் பரிந்துரைப்பது மாதிரி முட்டாள்தனம் எதுவும் இல்லை .
கண்டிப்பாக அவர் சொன்ன செக்ஸ் வலைக்குள் , போதை வலைக்குள் மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு , அதை நான் ஓஷோவின் முட்டாள்தனம் என்று சொல்லமாட்டேன் , அதை முட்டாள்தனமாகப் பிரசுரித்த அவர்களது பக்தர்களை சொல்ல்வேன். விமர்சனத்திற்கு இல்லாத ஞானம் என்பது உண்டா இவ்வுலகில் , இதை நான் கூறினால் ஓஷோவின் பக்தர்கள் உடனடியாக “ego” என்ற அரைகுறைப் புரிதலை வைத்து எடை போட ஆரம்பிப்பார்கள் , ஓஷோ என்பவரின் ஆளுமையை , கிருஷ்ணமுர்த்தி என்பவரின் ஆளுமையை கண்டிப்பாக செயல்பாட்டில் போட்டுத்தான் பார்க்கவேண்டும் , அதுதான் நாம் அவர்களுக்குச் செய்யும் மிகபெரிய நன்றிக்கடன் . அதுவே முறையானது .
ஓஷோவைப் பின்பற்றும் இளைஞர்களுக்கு உங்களால் ஒரு மணிநேரம் தியானத்தில் அமரமுடியும் என்றால் நீங்கள் அவரைப் பரிசோதிக்கலாம் , இல்லையென்றால் கண்டிப்பாக நீங்கள் செல்லும் வழி போதை அல்லது சுய ஏமாற்று தான் . “while sipping a cup of tea or cigar you can become enlightened ” அவர் சொன்னது ஞானத்தைப் பற்றி, நம் உணர்வில் இல்லாத ஒரு விஷயம் ஞானம் ,ஆனால் நாம் எளிதில் பார்த்த கேள்விப்பட்ட “cigar” (சிகிரட்டை) நம் மனதின் குரங்கு எடுத்து ஊத ஆரம்பிக்கும் அதுதான் சமநிலை இல்லாத மனம் தனக்கு தெரிந்த விஷத்தை வைத்து ஞானத்தை எடைபோடும் . கிருஷ்ணமூர்த்தியும் conscious என்ற வார்த்தைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதுபோலத்தான், அவர்களின் ஆளுமை ஈடு இணையில்லாத விசயம்தான் ஆனால் , வார்த்தைகளில் மாட்டிக் கொள்ளாமல் ஞானத்தை அடைந்தவர்கள் இல்லை என்றுதான் நினைக்கிறேன்,அது ஒரு stage என்றுதான் படுகிறது . அதனால் ஒரு வலைக்குள் மாட்டிகொண்டு ஞானம் அடைந்துவிட்டதாக நினைக்க வாய்ப்புகள் அதிகம் . அதுவே ஞானத்தின் கதவு மூடப்படும் அறிகுறிகள் . “openess ” இல்லையென்றால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்று நான் அறிந்த சில பாடங்கள் . இதையே அனைவருக்கும், உங்களுக்கும் அளவுகோலாகப் பயன்படுத்துவேன் , நான் உட்பட இதில் உண்டு , “how will one understand the ego by nurturing it,one has to put the ego images of OSHO we have created in us to test” .
வணக்கம்
லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்

கருத்துகள் இல்லை: