திங்கள், 17 செப்டம்பர், 2012

உளவுத்துறை எச்சரிக்கை! தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் தாக்கப்படலாம்

Viruvirupu
மெரிக்க எதிர்ப்பு நிலை உலக நாடுகள் பலவற்றில் தோன்றியுள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மல்டி நேஷனல் குளிர்பான நிறுவனங்கள், குடோன்கள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்கள், தனியார் நிறுவனங்களை தாக்கும் அளவுக்கு போகலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. எந்தவொரு நிறுவனமும் மூடப்படவில்லை. போலீஸ் காவலுடன் இயங்குகின்றன.
இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் எடுத்த திரைப்படத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகமும் தாக்குதலுக்கு உள்ளானது.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக, அமெரிக்க மல்டி நேஷனல் குளிர்பான நிறுவனங்கள், குடோன்கள், மற்றும் அலுவலகங்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து மல்டி நேஷனல் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னைக்கு வெளியே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மல்டி நேஷனல் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், குளிர்பான உற்பத்தி தொழிற்சாலைகள், குடோன்கள் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: