டில்லியில் பிரதமர் முன்னிலையில் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா, 24 நாட்களுக்கு 48 டி.எம்.சி., தண்ணீர் கேட்ட
நிலையில், பிரதமர் வலியுறுத்தியும் கூட, "தமிழகத்திற்கு தண்ணீர் தர
முடியாது' என கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்ததாலும், சரியான மழை இல்லாததாலும், தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பை சந்தித்தது. தொடர்ந்து, சம்பா சாகுபடிக்காவது காவிரி நீரை திறந்து விட, கர்நாடக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்றும், காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும், முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதங்கள் மூலம் வலியுறுத்தினார்.
ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாததால், சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு நாடியது.தொடர்ந்து, காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. காவிரி நதிநீர் ஆணைய கூட்டம், ஆணையத்தின் தலைவர் பிரதமர் தலைமையில் நேற்று(19ம் தேதி) நடப்பதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில், கலந்துகொள்வதற்காக நேற்று காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா, டில்லி புறப்பட்டுச்
சென்றார். கூட்டத்தில் முதல்வருடன் கலந்து கொள்ள தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் சென்றனர். பிரதமர் இல்லத்தில், நேற்று மாலை காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கேரளா சார்பில், முதல்வர்உம்மன் சாண்டிக்குப் பதில், நீர்ப்பாசன அமைச்சர் கலந்து கொண்டார். இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, "சம்பா சாகுபடியை காப்பாற்ற, வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து, நடுவர் மன்றம் கூறிய முறையை பின்பற்ற கர்நாடகா முன்வர வேண்டும், கர்நாடக அரசின் செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்திற்கு 24 நாட்களுக்கு தினசரி இரண்டு டி.எம்.சி., வீதம் 48 டி.எம்.சி., நீரை கர்நாடகா தரவேண்டும்' என்று வலியுறுத்தினார்.
ஆனால், கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், தொடர்ந்து வறட்சி நிலவி வருவதாகவும், பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கே தண்ணீர் வினியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறி, தெரிவித்தார்.
தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக முதல்வர் மறுத்தார். மேலும், வேண்டுமென்றால், மத்திய அரசின் சார்பில் குழு ஒன்றை அனுப்பி நிலைமைகளை நேரடியாக பார்த்துக் கொள்ளலாம் எனறும்ஆனால், இந்த யோசனையை தமிழக முதல்வர் ஏற்காததுடன், உடனடியாக தண்ணீர் வேண்டும் என்றும் வாதிட்டார். தவிர இரு மாநில அதிகாரிகளும் சில விவரங்களை எடுத்து வைத்த நிலையில், கடைசியில் பிரதமரும் தலையிட்டு குறைந்த பட்ச தண்ணீரை அளிக்கும்படி கூறியும் அதற்கு ஒப்புக் கொள்வதற்கு கர்நாடகா மறுத்துவிட்டது. இதையடுத்து, இந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.தொடர்ந்து, இந்த விஷயத்தில் தமிழகம் இனி சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகம், சுப்ரீம் கோர்ட்டை அணுகும் என்று கூறப்படுகிறது.- நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக