அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் பெரியார் விழா விழாவில் பங்கேற்றார் அமெரிக்க நாத்திகப் பெண்மணி! அடுத்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் கொண்டாட முடிவு
அமெரிக்காவின் தலை நகரமான வாஷிங்டனில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வெகு சிறப் பாகக் கொண்டாடப் பட்டது.
வருடா வருடம் தந்தை பெரியாரின் பிறந்த
நாளை பெரி யார் பன்னாட்டு மய்யம் பெரியாருக்கு நன்றி கூறும் வகையில் பெரி
யார் பிறந்தநாளை கொண் டாடுவது வழக்கம். செப்டம்பர் 15, சனி மதியம்
மேரிலாந்தில் உள்ள எல்க்ரிட்ஜ் என்ற நகரில் உள்ள பொது நூலகத்தில் தந்தை
பெரியார் விழா நடை பெற்றது.
இந்த விழாவை கடந்த சில வாரங்களாக
மருத்துவர் சோம. இளங் கோவன் ஒருங்கிணைத்து வந்தார். விழாவின் முதன் முதலில்
"லிபியாவில் உள்ள அமெரிக்க தூது வர் கிறிஸ்டோபர்" மறைவிற்கு ஒரு நிமிடம்
மவுன அஞ்சலி செலுத்தி விழா தொடங்கப் பட்டது. இந்தாண்டு விழாவில் ஒரு சிறப்
பம்சம் உள்ளது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர் மற்றும் பேச்சாளர்
இருவர் வந்து இருந்தார்கள். ஒருவர் வெள்ளைக்கார அமெரிக்கப் பெண்,
மற்றொருவர் பெரும் கவிக்கோ வா.மு. சேது ராமன்.
வெள்ளைக்காரப் பெண்மணி பங்கேற்பு
வெள்ளைக்காரப் பெண்மணியின் பெயர்
மார்கெரட் டவ்லி. இந்த மார்கெரட் அமெரிக்கா வில் பகுத்தறிவை, கட வுள்
மறுப்பாளர் இங்கர் சால் பற்றி பேசினார், அவற்றுள் உள்ள பல ஒத்த சிந்தனைகளை
தந்தை பெரியார் கருத் தோடு ஒத்துப் போவது கண்டு மிக மிக ஆச்சர் யம்
அடைந்தார். அவர் தன்னுடைய பேச்சில், தந்தை பெரியாரின் கருத்துகளை அமெரிக்க
வாழ் மக்களிடமும் நான் பகிர்ந்து கொள்ள விரும் புகிறேன் என்றார்.
தந்தை பெரியார்பற்றி பாடல் பாடி மகிழ்வித்த பூஜா செல்வன் (வயது 15)
அது மட்டும் அல்ல மார்கெரட் முழுநேர
பணியாக கட வுள் மறுப்பு, சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்வது என தொடர்ந்து
பணி செய்து கொண் டும், இங்கர்சாலின் பேச்சு மற்றும் எழுத் துகளை அமெரிக்கா
வில் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் பரப்புரை செய்தும் வருகிறார்.
ஆசிரியர் வீரமணி யின் நண்பரும், சிறந்த பகுத்தறிவாளருமான முனைவர் இன்னாசி
எல்லோரையும் வர வேற்று பேசிவிட்டு, அறி ஞர் அண்ணா, பெரியார் மற்றும்
ஆசிரியர் வீர மணியின் நட்பு மற்றும் அவர்களது களப்பணி பகுத்தறிவுப் பாதை,
கடவுள் மறுப்பை குறிப் பிட்டார்.
மேலும் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு,
பகுத்தறிவு சிந் தனைகளை மேல்நாட் டில் குறிப்பாக அமெரிக் காவில்
பரப்பவில்லை என்று ஆதங்கப்பட் டார். போராசிரியர் முனை வர் கிருஷ்ணகுமார்
விழாவில் கலந்து கொண்டு, அறிவியல், மதம் மற்றும் கோட் பாடு என்ற தலைப்பில்
புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். சில அடையாளங்கள் நம்மை ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு சிந்திக்க விடாது என் றார்.
புத்தர் எப்படி பல அடையாளங்களை உடைத்தார்
என்றும், பகவத் கீதை மற்றும் பைபிள் போன்ற மத நூல்களில் நிறைய அறி
வியலுக்கு முரண்பட்ட கருத்துகள் உண்டு என் பதையும் சில எடுத்துக்
காட்டுகளுடன் விளக் கினார்.
பெரியாரும், காந்தியும்
அமெரிக்க நாத்திகப் பெண்மணி மார்கெரட் டவ்லி, மருத்துவர் சோம. இளங்கோவன் முதலியோர் (15.9.2012)
காந்தி கூட இந்து மதத்தை சீரமைக்க
வேண்டும் என்றுதான் சொன்னாரே ஒழிய, எல்லோரும் சமம், ஜாதி கூடாது என்று
சொல்ல வில்லை என்றும் குறிப் பிட்டார், ஆனால் தந்தை பெரியார் மனிதர் களில்
வேறுபாடு இல்லை, எல்லோரும் சமம் என்ற கருத்தை பல ஆண்டு களுக்கு முன்பே
நிறுவி னார் என்பதையும் பேரா சிரியர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் எல் லோருக்கும் புரியும்
வண்ணம் எளிய ஆங்கி லத்தில் முனைவர் பிரபா கரன் அவர்கள் இலக்கி யத்தில்
மனிதனுக்கு வேறுபாடு இல்லை, சாதி அடுக்குகள் இல்லை என்பதை, திருவள்ளுவர்,
சங்க இலக்கியம், ஔ வையார், சிலப்பதிகாரம் மூலம் சில பாடல்கள்
எடுத்துக்காட்டு மூலம் விளக்கினார். நாஞ்சில் பீட்டர் அவர்கள், தந்தை
பெரியாரின் பல கருத்துகள் அடங்கிய புத்தகங்களை தமிழ் சமுதாயத்தில் பிரபல
மான பெரும்வாரி மக்கள் ஏற்றுக் கொண்ட எழுத்தாளர்களைக் கொண்டு உரு வாக்க
வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பூஜா செல்வன் என்ற 15 வயது பெண், தந்தை
பெரியாரின் பெரி யார் அவர்தாம் பெரியார் என்ற பாடலும் கிழவன் அல்ல கிழக்கு
திசை என்ற இரு பாடல்களையும் மிக மிக அருமையாகப் பாடினாள். பார்வையாளர்கள்
அனைவரும் மனமுவந்து பாராட்டினார்கள். தமிழகத்தில் இருந்து வந்திருந்த
மற்றொரு பிரபலம் பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் தந்தை பெரி யாரைப் பற்றி
நீண்ட கவிதை வாசித்தார்.
தந்தை பெரியாரால் பெயர் வைக்கப்பட்ட திரு பன்னீர் செல்வம் அவர்களும் பெரியாரை பாராட்டி ஒரு கவிதை வாசித்தார்.
மருத்துவர் சோம. இளங்கோவன்
விழாவின் இறுதியாக மருத்துவர் சோம. இளங்
கோவன் தந்தை பெரி யாரும், இங்கர்சாலும், என்ற ஒப் புமையை எடுத்துரைத்தார்.
இவர்கள் இருவரும் எப்படி மதத்தை எதிர்த் தார்கள், ஆன்மீக அடையாள
சின்னங்களான கோவில், சர்ச் இவற்றை ஏன் எதிர்த்தார்கள், இவர்கள் இருவரும்
பெண் விடு தலைக்கு எப்படி போரா டினார்கள், அனைத்து மனிதர்களுக்கும் சம
உரிமைக்காக போராடி னார்கள் என்று ஒப் புமை கொடுத்து பேசி யது
பார்வையாளர்கள் மிக மிக ரசித்துக் கேட் டார்கள்....
விழாவின் நடுவில் ஈழ மக்களுக் காகவும்,
சாந்தன், பேரறிவாளன், முருகனுக்காக போராடி இன்னுயிரை நீத்த தோழர்
முத்துக்குமார் மற்றும் தோழி செங்கொடிக்கு மயிலாடுதுறை சிவா ஒரு நிமிடம்
நினைவு கூர்ந்தார்...
விழாவின் இறுதியில் கொழந்தை வேல் இராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
இன்னும் பெரிய அளவில்....
வழக்கம் போல் இந்தாண்டும் அமெரிக்காவில்
பெரியார் பன் னாட்டு மய்யம், பெரியார் பிறந்த நாள்விழாவை கொண்டாடினாலும்,
அடுத்தமுறை இன்னமும் பெரிய அளவில், பெரிய அரங்கில் கொண் டாட வேண்டும் என்று
அனைவரும் கேட்டுக் கொண்டார்கள்.
விழாவிற்கு பென்சில்வேனியா, மேரிலாந்து, வெர்ஜினியா, டெலவேர் மற்றும் நியுஜெர்சியில் இருந்து தமிழர்கள் கலந்து கொண்டார்கள்....
விழா கட்டுரை தொகுப்பு மயிலாடுதுறை சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக