வெள்ளி, 21 செப்டம்பர், 2012

6,000 விசா ஸ்டிக்கர்கள் மாயம் London இந்தியத் தூதரகத்தில்

Viruvirupu
லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட 4 டிப்ளமேட்டிக் பைகள் திருட்டுப் போயுள்ளன. இந்த 4 பைகளில் 3 பைகளில் 6000 விசா ஸ்டிக்கர்கள் இருந்தன. அவற்றை யாரோ அடித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லியில் இருந்து ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய தூதரகத்தின் டிப்ளமேட்டிக் பைகள், லண்டன், ஆல்ட்விச்சில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
யாருங்க எடுத்தாங்க?
தூதரகத்திற்கு சென்றதும் அவற்றை இறக்கி சரிபார்த்தபோது 4 பைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
மொத்தம் 27 பைகள் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதில் 25 பைகளில் 50,000 விசா ஸ்டிக்கர்கள் இருந்தன.
பைகள் திருட்டு பற்றி உடனடியாக டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருட்டு போன விசா ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். லண்டன் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இனி ஆளை பிடித்து என்ன சொய்யப் போகிறார்களோ! (‘இன்சைட் ஜாப்’ என்று ஒரு கதை லண்டனில் அடிபடுகிறது)

கருத்துகள் இல்லை: