கொல்கத்தா: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல்
காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று ராஜினாமா கொடுத்த பின்னர் மேற்கு வங்கத்தில்
திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள 6 காங்கிரஸ்
அமைச்சர்களும் ராஜினாமா செய்ய உள்ளனர்.
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகிய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருந்தது. இதன்படி இன்று திரிணாமுல் காங்கிரசின் மத்திய அமைச்சர்கள் 6 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்யும் அதே நேரத்தில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசிலிருந்து வெளியேறி ராஜினாமா செய்யுமாறு அம்மாநில காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசில் 6 காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக