புதுடில்லி:சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது,
டீசல் விலையை உயர்த்தியது ஆகியவற்றுக்கு விளக்கம் அளித்து, பிரதமர்
மன்மோகன் சிங், தொலைக்காட்சி மூலமாக நேற்று, நாட்டு மக்களுக்கு உரை
நிகழ்த்தினார். சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், டீசல், பெட்ரோல் விலையை
உயர்த்த வேண்டியதாகிறது. விலையை உயர்த்தா விட்டால், கடும் நிதிப்
பற்றாக்குறை ஏற்படும். சாதாரண மக்களுக்கு சுமையை அதிகரிக்க வேண்டும்
என்பது, அரசின் நோக்கமல்ல. சாதாரண மக்களின் நலன் கருதியே, மண்ணெண்ணெய்
விலையை உயர்த்தவில்லை.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை
அனுமதித்தால், நாட்டில் உள்ள சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என, தவறான
பிரசாரம் மேற்கொள்ளப் படுகிறது.இது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், விவசாயிகள் பயனடைவர். விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். எனவே, இது தொடர்பாகக் கிளப்பப்படும் பீதியை, மக்கள் நம்ப வேண்டாம். அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு பிரதமர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக