அகிலேஷ் யாதவ் பதவி ஏற்று 6 மாதத்தில் 2,437 கொலைகள்
உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் கடந்த
பிப்ரவரி, மார்ச்சில் 8 கட்டங்களாக நடந்தது. இதில் மாயாவதியின் பகுஜன்
சமாஜ் கட்சியை வீழ்த்தி முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது.
முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், மார்ச் 15ம் தேதி முதல்வராக பதவி
ஏற்றார். தனது 38 வயதில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த அகிலேஷ், உ.பி.யின்
இளம் வயது முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார். தேர்தலில் சமாஜ்வாடி
வெற்றி பெற்ற சில மணி நேரங்களிலேயே வன்முறை வெடித்தது. துப்பாக்கியால்
சுட்டு வெற்றியை கொண்டாடியதில் குண்டு பாய்ந்து சிறுவன் பலியானான். அடுத்த
சில மாதங்களில் மாநிலத்தில் குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியது. அகிலேஷ்
ஆட்சி அதிகாரத்துக்கு வந்து நேற்றோடு 6 மாதங்கள் முடிவடைந்தது. இந்த 6
மாதங்களில் மாநிலத்தில் 2,437 கொலைகள் நடந்துள்ளன. 1100 பாலியல் கொடுமை
வழக்குகள் பதிவாகி உள்ளன.
450 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளது. கலவரம்,
வன்முறையால் பல நகரங்கள் ஊரடங்கு உத்தரவை சந்தித்துள்ளன. காவல் துறை தோல்வி
அடைந்துள்ளதாக முதல்வர் அகிலேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். ‘போலீஸ் துறையில் பல
குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய முயற்சித்து வருகிறோம் என அவர்
கூறியுள்ளார். அரசில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் முதல் யாரும்
சரியில்லை என பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி
வருகின்றன
ஆட்சியின் சாதனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக