நியூயார்க்கில் ரெஸ்டாரன்ட், தியேட்டரில் சோடா, கூல்
டிரிங்ஸ் போன்ற சர்க்கரை கலந்த குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
NYC bans big, sugary drinks at restaurants
அமெரிக்காவில் உடல் பருமன் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் உடல் பருமனை குறைக்க பல்வேறு பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. எனினும், துரித உணவகங்களில் ஜங்க் புட் சாப்பிடுவதால் இந்த பிரச்னையை தடுக்க முடியவில்லை. நியூயார்க் நகரில் மட்டும் ஆண்டுக்கு 6,000 பேர் உடல் பருமன் பிரச்னையால் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு காண, ரெஸ்டாரன்ட், தியேட்டர்களில் சோடா, கூல் டிரிங்ஸ் விற்பனையை தடை செய்ய மேயர் மைக்கேல் புளூம்பர்க் முடிவெடுத்துள்ளார். அமெரிக்காவிலேயே கூல் டிரிங்சுக்கு தடை கொண்டு வரும் முதல் நகரம் நியூயார்க் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், சோடா, கூல் டிரிங்ஸ் பாட்டில்கள் பெரிய பெரிய அளவில் வருகின்றன. இதற்கும் கட்டுப்பாடு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறிய பாட்டில்களில் இவற்றை விற்பதற்கு அனுமதிக்கலாம் என்று நியூயார்க் சுகாதார துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்து மேயர் மைக்கேல் கூறுகையில், Ôசர்க்கரை கலந்த சோடா, கூல் டிரிங்ஸ்களை ஓட்டல், தியேட்டர்களில் அதிகம் பேர் வாங்கி குடிக்கின்றனர். இந்த இடங்களில் விற்பனையை தடுப்பதன் மூலம், மக்களின் உடல் பருமன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும்Õ என்றார். இந்த தடை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக