செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ரிசர்வ் வங்கி கவர்னர் : 2-ஜி ஸ்பெக்ட்ரத்தில் இழப்பீடு இல்லை

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பீடு ஏற்படவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார். ஊழல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பார்லி‌க்கூட்டுக்குழுவில் இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் ஆஜாரானார்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சி.ஏ. ஜி.அறிக்கையினால் அப்போதை‌ய தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பி.சி.சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக்குழு (ஜே.பி.சி.) விசாரணை நடத்தி வருகிறது.
இன்று நடந்த ‌கூட்டத்தில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிய போது நிதித்துறை செயலராக இருந்த சுப்பாராவ், தற்போது ரிசர்வ்வங்கியின் கவர்னராக உள்ளார். இன்று அவர் ஆஜாராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதில் இழப்பீடு ஏற்படவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை: