டெல்லி: மத்திய அரசுக்கு சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடிய சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது பரபரப்பாக பேசப்பட்டது. இன்று தமது முடிவை அறிவிப்பதாக முலாயம்சிங் கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட முலாயம்சிங், நாட்டில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தற்போதைய மத்திய அரசுக்கான ஆதரவு தொடரும். அதே நேரத்தில் விலைவாசியை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டோம். டீசல் விலை உயர்வு, கேஸ் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மத்திய அரசு கைவிடாவிட்டால் மற்ற கட்சிகளுடன் இணைந்து மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக