’மதராசப்பட்டினம்’
படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகை ஏமி ஜாக்சனை அறிமுகப்படுத்தியவர்
இயக்குனர் விஜய். தற்போது விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‘தாண்டவம்’
படத்திலும் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். தாண்டவம் ஆக்ஷன் படம் என்பதை,
படத்தின் விளம்பர போஸ்டர்களே நிரூபிக்கின்றன.
ஆனால்
ஹீரோவின் ஆக்ஷனை விட இப்போது பரபரப்பாக பேசப்படுவது ஹீரோயின் ஆக்ஷன்
தான். தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்துவருகிறது. லண்டனில்
உள்ள மிக உயர்ந்த அடுக்கு மாடிக்கட்டிடத்திலிருந்து குதிப்பது போன்ற
காட்சியில் ஏமி ஜாக்சன் நடித்திருப்பதாக தெரிகிறது.
’ஸ்கை டைவிங்’கில் ஏமி ஜாக்சன் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கியிருக்கிறாராம். ஏமி ஜாக்சனின் இந்த சாகசத்தை பார்த்து இயக்குனர் விஜய் அவரை பாராட்டியுள்ளார்.
’ஸ்கை டைவிங்’கில் ஏமி ஜாக்சன் சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கியிருக்கிறாராம். ஏமி ஜாக்சனின் இந்த சாகசத்தை பார்த்து இயக்குனர் விஜய் அவரை பாராட்டியுள்ளார்.
ஏமி
ஜாக்சனை பற்றி அறிந்து அவரது திறமையை வெளிக்காட்டிவிட்டார் இயக்குனர்
விஜய். ஏமி ஜாக்சனிடம் இன்னும் என்னனென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கிறதோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக