ஆந்திராவில் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான
ஜெகன்மோகன் ரெட்டியை சிபிஐ இன்று (27.05.2012) கைது செய்தது.
முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக அவரிடம் கடந்த 3 நாள்களாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.
இதுகுறித்து
கருத்து தெரிவித்திருந்த ஜெகன்மோகன் ரெட்டி, சிபிஐ தன்னிடம்
சம்பந்தமில்லாத பல கேள்விகளை கேட்டாலும் அதற்கெல்லாம் பொறுமையாக பதில்
அளித்துவந்ததாகத் தெரிவித்தார். ஒத்துழைப்பு
தரவில்லை என்று கூறிவிடுவார்கள் என்பதற்காக அனைத்து கேள்விகளுக்கும்
பொறுமையாக பதிலளித்தேன் என்று தெரிவித்திருந்தார். இன்று (27.05.2012)
காலை முதலே அவர் கைது செய்யப்படக்கூடும் என்று செய்திகள் வெளியான வண்ணம்
இருந்தன. இந்த நிலையில் மாலை (27.05.2012) 7 மணியளவில் அவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆந்திராவில் பலத்த போலிஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
ஜெகன்மோகன் கைது செய்தி பரவாமல் இருக்க ஆந்திரா முழுவதும்
பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள்
வெளியாகி உள்ளன.
ஜெகன்மோகன் சொத்து குவிப்பு வழக்கில் ஏற்கனவே
ஜெகன்மோகன் ஆடிட்டர் விஜயபால், முன்னாள் அமைச்சர் வெங்கடரமணா உள்பட 4 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக