புதன், 30 மே, 2012

வீட்டுல இருந்தே வொர்க் பண்ணுங்க.. ஐடி நிறுவன ஐடியாக்கள்!

சென்னையில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சாப்ட்வேர் நிறுவனங்களையும் விடவில்லை.
சென்னையில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஜெனரேட்டர்களை வைத்துத் தான் சாப்ட்வேர் நிறுவனப் பணிகள் சமாளிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏசி, லிப்ட்களின் இயக்கமும் அடக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அட்மின் மேனேஜர்களும், பெசிலிடீஸ் மேனேஜர்களும் அல்லோலப்பட்டு வருகின்றனர். டீசல் வாங்க ஆபிஸ் பாஸ்களுடன் ஒவ்வொரு பெட்ரோல் நிலையமாக ஏறி இறங்கி வருகின்றனர்.
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. இதையடுத்து பல சாப்ட்வேர் நிறுவனங்களில் நேற்றும் இன்றும் லிப்ட்கள் இயங்கவில்லை, ஏசிக்களும் இயங்கவில்லை. மின்சாரம் இருக்கும்போது மட்டுமே அவை இயக்கப்பட்டன. மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டன.
தரமணி எஸ்டிபிஐ பார்க்கில் டீசலை முன்பே வாங்கி வைத்ததால் தப்பிவிட்டனர். ஆனால், டைடல் பார்க்கில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் படிக்கட்டுகளில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தனர்.

இந்த மின் தட்டுப்பாடு, பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு காரணாக ஆபிஸ்களுக்கு லீவு போட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதையடுத்து 'வீட்டிலிருந்தே வொர்க் பண்ணுங்கோ' ஆயுதத்தை பல நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.

நிலைமை மிக மோசமாகி வருவதால், தமிழக மின்வாரியத்தின் உதவியை நாஸ்காம் மூலம் நாடியுள்ளன சாப்ட்வேர் நிறுவனங்கள். இதையடுத்து ஐடி பார்க்குகளுக்கு மட்டும் முடிந்தவரை கரண்டை கட் பண்ண மாட்டோம் என்று உறுதி தந்திருக்கிறார்களாம் மின்வாரிய அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை: