திங்கள், 12 மார்ச், 2012

போலீஸ் குவிப்பு Dr.ராமதாசை கைது ?


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு,  கொலைவழக்கில் ன்று பிற்பகல் விசாரனைக்கு ஆஜரா கும்படி சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு திண்டிவனம், தைலாபுரம் அருகே தற்போதைய அதிமுக அமைச்சர் சிவி.சண்முகத்தின் உறவினரை டாக்டர் ராமதாசின் தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிவி.சண்முகம் போலீசில் புகார் செய்திருந்தார்.   புகாரில் சம்பவத்தின்போது தான் மையிரிழையில் உயிர் தப்பியதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து காவல்நிலைய விசாரணையில் இருந்த இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அடுத்த கட்ட முன்னேற்றமாக சிபிஐ கைக்கு இந்த விசாரணை சென்றது.
ராமதாசின் சகோதரர் சீனிவாசன் மற்றும் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட சிலரையும் சிபிஐ சம்மன் த்து அழைத்து விசாரணை நடத்தியது. இதில் டாக்டர் ராமதாசும் அவர் மகன் டாக்டர் அன்புமணி ராமதாசும் மட்டுமே விசாரிக்கப்படவேண்டிய பட்டியலில் இருந்தனர
இந்த சூழ்நிலையில் இன்று சிபிஐ கோர்ட், ராமதாசை விசாரனைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.
விசாரனைக்கு டாக்டர் ராமதாஸ் ஆஜராகுவதற்கு முன்பாகவே அவரை கைது செய்யத்தான் போகிறார்கள் என்ற அனுமானத்தகவல்கள் பரவியதால் திண்டிவனம், விழுப்புரம், கடலூர், விக்கிரபாண்டி, உளூந்தூர்பேட்டை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பரபரப்பு எகிறியுள்ளது.
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழக்கூடாதென முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டிவனம் தைலாபுர தோட்டத்திலும், சென்னை பாமக தலைமை அலுவலகத்திலும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: