செவ்வாய், 13 மார்ச், 2012

உலக வங்கி தலைவர் பதவிக்கு Infosys நந்தன் நீலேகனி ?...?


Nandan Nilekani
டெல்லி: உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்தியாவின் சார்பில் இன்போசிஸ் முன்னாள் தலைவரும், தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் தலைவருமான நந்தன் நிலேகனியை முன்னிருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதை மத்திய அரசு இன்னும் உறுதி செய்யாவிட்டாலும், இது தொடர்பாக ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடப்பதாகத் தெரிகிறது.
உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நடத்தினாலும் உலக வங்கியின் தலைவர்களாக இதுவரை பெரும்பாலும் அமெரிக்கர்களே பதவி வகித்து வந்துள்ளனர். இப்போது தலைவராக உள்ள அமெரிக்கரான ராபர்ட் சோய்லிக்கின் பதவிக் காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய தலைவருக்கான பெயர்களை பரிந்துரைக்குமாறு உலக வங்கியின் உறுப்பு நாடுகளான 165 நாடுகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 23ம் தேதிக்குள் இந்தப் பரிந்துரைகளை அளிக்குமாறு உலக வங்கி கோரியுள்ளது.
இந்தப் பதவிக்கு வர அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் விரும்புவதாகத் தெரிகிறது. அரசியலில் இருந்து தாற்காலிகமாக ஒதுங்க நினைக்கும் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
அதே போல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயியின் பெயரும் இந்தப் பதவிக்கு அடிபடுகிறது.

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்கர் அல்லாதவர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
இந் நிலையில் இந்தியாவின் சார்பில் நந்தன் நீலேகனியின் பெயரை பரிந்துரைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
ஆனால், இதை நந்தன் தரப்பு மறுத்துள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை வெற்றிகரமாக முடிப்பதே இப்போதைக்கு தனது குறிக்கோள் என்று நந்தன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: