Viruvirupu
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் கொண்டுவந்த தீர்மானம், மத்திய அரசில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தப் போவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்று திமுக தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் தி.மு.க. தலைவர் , கடந்த காலத்திலும் இப்படியான வாய் எச்சரிக்கைகளை விடுவது வழக்கம்தான். ஆனால், இம்முறை தமிழகத்தில் செல்வாக்கை அரசியல் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால், வெறும் வார்த்தை விளையாட்டுகள் உதவாது என்பதை தலைவர் உணர்ந்திருக்கிறார்.
இதுவரை காலமும் இலங்கை விவகாரத்தில், தி.மு.க.-வுக் தமிழகத்தில் கெட்ட பெயர்தான் உள்ளது.சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்து, தமிழகத்தில் ஆட்சியை இழந்துவிட்டது. தற்போது தி.மு.க.-வின் கையில் உள்ள அதிகாரம், மத்திய அரசில் அங்கம் வகிப்பது மட்டுமே (அங்கும் இங்குமாக உள்ள உள்ளாட்சி சபை அதிகாரங்களை விட்டுவிடுங்கள்)
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகின்றது. தமிழகத்தில் இன்றிருக்கும் அரசியல் சூழ்நிலை தொடர்ந்தால், தி.மு.க., தற்போது கையில் வைத்துள்ள எண்ணிக்கையிலான எம்.பி.க்களை மீண்டும் பெற முடியாது என்று அடித்துச் சொல்லிவிடலாம்.
மொத்தத்தில், தி.மு.க. அரசியலில் நிலைக்க வேண்டுமென்றால், ஒரு ‘திருப்புமுனை’ அவசியமாகிறது. இலங்கை விவகாரம் அந்த திருப்புமுனையைக் கொடுக்கும் என்று நம்பினால், அவர் மத்திய அரசை கடும் அழுத்தத்தில் ஆழ்த்த முடியும்.
அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று கூறிய அவர் , அது தொடர்பாக இன்று கூறிய கருத்தில், கொஞ்சம் கடுமையான வார்த்தைப் பிரயோகம் இருப்பதைக் காணலாம். “இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே அமையும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்திற்காக கிளம்பிக் கொண்டிருந்த தி.மு.க. தலைவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாங்கள் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தோ அல்லது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது குறித்தோ நானாக மட்டும் முடிவு செய்ய முடியாது. எங்களது செயற்குழு கூடித்தான் முடிவெடுக்கும். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் முடிவெடுப்போம்” என்றார்.
கலைஞரின் இந்த பேச்சால் மாநிலத்திலும், மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நிஜம்தான். ஆனால் தனது சொல்லில் இம்முறையாவது உறுதியாக இருப்பாரா, அல்லது (வழமைபோல) பல்டியடிப்பாரா என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்துபோகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக