திங்கள், 12 மார்ச், 2012

2014 ல் பாஜக ஆட்சி அமைப்பது கடினமே: ஆர்.எஸ்.எஸ். கணிப்பு


Mohan Bagawat
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருக்கும் பாரதிய ஜனதாவால் 2014-ல் மத்தியில் ஆட்சி அமைப்பது என்பது கடினமானது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசரில் எழுதப்பட்டுள்ளதாவது:
உத்தரப்பிரதேசத்தில் கட்சி கட்டமைப்பும் தொண்டர் பலமும் வலுவானதாக இருந்தும் வாக்காளர்களை பாஜகவால் ஏன் கவர முடியவில்லை?
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் தொண்டர்களைவிட கட்டுக்கோப்பான தலைவர்கள் அதிகம்.
2007-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பெற்ற இடங்களை விட 4 குறைவாக அதாவது 47 இடங்கள் மட்டுமே பாஜக பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச தேர்தலானது 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது கடினம் என்பதையே வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் மக்களிடமிருந்து பாஜக அன்னியப்பட்டுப் போயுள்ளது என்று அதில் எழுதப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: