புதுடில்லி: ""இந்தியாவின் மொத்த வீடுகளில், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் குளியல் அறைகளோ, கழிப்பறைகளோ இல்லை. ஆனால், பெரும்பாலான மக்கள், மொபைல் போன்கள் வைத்துள்ளனர்'' என, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்தாண்டு, வீடு, வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, வீடுகளில் உள்ள சுகாதார வசதிகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள, 24 .66 கோடி வீடுகளில், 46 சதவீத வீடுகளில் தான் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் உள்ளன. 49 சதவீதம் பேர் வீடுகளில் கழிப்பறை, குளியல் அறை வசதிகள் இல்லை. இவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மூன்று சதவீதம் பேர், பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். அதிகபட்சமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 77 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. இதற்கு அடுத்தபடியாக ஒடிசாவில், 75 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. அதேநேரத்தில், நாடு முழுவதும் உள்ள வீடுகளை கணக்கிடும்போது, 63 சதவீத வீடுகளில் டெலிபோன் வசதி உள்ளது. இதில், 53 சதவீதம் பேரிடம் மொபைல் போன்கள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக