புதன், 14 மார்ச், 2012

2ம் வகுப்பு முதல் ஏசி வரை ரயில், பிளாட்பார் கட்டணமும் அதிகரிப்பு


Train
டெல்லி: 2012-13ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று தாக்கல் செய்தார்.
இதில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் ரயில் கட்டணங்கள் முதன் முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. பிளாட்பார்ம் கட்டணமும் ரூ. 3ல் இருந்து ரூ. 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 5 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
3ம் வகுப்பு ஏசி வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ஏசி கட்டணம் கிலோமீட்டருக்கு 30 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
300 கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்துக்கான கட்டணம் ரூ. 12 அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: