நாகரீக உடை அணிந்ததால் 14 இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை
ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் முற்றிலும் வாபஸ் பெறப்பட்ட பிறகு அங்கு மீண்டும் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து விட்டது. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உயிரை பறித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஷியா பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி இளைஞர்கள் அமெரிக்கர்களின் ஸ்டைலில் நவ நாகரீக உடைகளை அணியக் கூடாது. இறுக்கமான ஜீன்ஸ் பேண்டுகள், டி.சர்ட்டுகளை அணியக்கூடாது. அதில் லோகோக்கள் இடம் பெறக்கூடாது.நீளமான தலைமுடியுடன் அலங்காரம் கூடாது.
பெண்கள் ஆடம்பரமாக இருக்கக் கூடாது. இவையெல்லாம் கீழ்த்தரமான செயல் என்று அறிவித்துள்ளனர்.அதையும் மீறி செயல்படும் இளைஞர்கள் 14 பேர் கல் மற்றும் செங்கற்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் சதார் நகரிலும், 3 பேர் கிழக்கு பாக்தாத்திலும் 2 பேர் மத்தியமார்க் பகுதியிலும் கொலை செய்யப்பட்டுள்னர்.
இவர்களின் உடல்கள் ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மேலும் பலர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்களும் அடங்குவர்.
நாகரீக உடையுடன் வலம் வரும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் முதலில் எச்சரிக்கப்படுகின்றனர். அதன் பிறகும் நாகரீக உடை அணிந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆங்காங்கே ஒட்டப்படுகிறது.
பின்னர் அவர்கள் தீவிரவாதிகளால் நடுரோட்டில் கல்லால் அடித்து கொலை செய்யப்படுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக