செவ்வாய், 13 மார்ச், 2012

ரூ.2 லட்சத்தில் சிறிய கார்: நிசான்-லேலண்ட்

ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலையில் சிறிய காரை அசோக் லேலண்ட்டுடன் இணைந்து நிசான் நிறுவனம் தயாரிக்கிறது. வரும் 2014ம் ஆண்டில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் இந்தியாவில் அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து தோஸ்ட் என்ற மினி லோடு வேனை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அடுத்து இந்த கூட்டணியில் ஸ்டைல் எம்பிவி கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, புத்தம் புதிய சிறிய காரை தயாரிக்க இந்த கூட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நிசான் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் மைக்ரா ஹேட்ச்பேக் காரைவிட குறைந்த விலையில் இந்த புதிய கார் வருகிறது.
இதுகுறித்து ஜெனிவா மோட்டார் ஷோவில் கலந்துகொண்ட நிசான் மோட்டார் துணைத் தலைவர் ஆண்டி பால்மர் கூறுகையில்," அசோக் லேலண்ட்டுடன் இணைந்து புதிய சிறிய காரை தயாரிக்கிறோம்.
வரும் 2014ம் ஆண்டில் இந்த சிறிய கார் விற்பனைக்கு வரும். ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலைக்குள் இந்த சிறிய கார் விற்பனைக்க வரும்," என்றார்.
இந்த நிலையில், இந்த சிறிய கார் தற்போது அசோக் லேலண்ட்டின் வடிவமைப்பு மையத்தில் தற்போது வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணிகளை அசோக் லேலண்ட்டும், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையை நிசானும் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், புதிய காரின் எஞ்சின் உள்ளிட்ட தகவல்களை நிசான் வெளியிடவில்லை. இந்த புதிய கார் மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது

கருத்துகள் இல்லை: