வெள்ளி, 16 மார்ச், 2012

மைனாரிட்டி 13,000 பேருக்கு வாழ்வளித்தது: மெஜாரிட்டி அவர்களை வீட்டுக்கு அனுப்பியது: துரைமுருகன்


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் திமுக பிரச்சார பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
இந்த தேர்தல் ஒரு ஆட்சியை மாற்றி அமைக்கக் கூடிய தேர்தல் அல்ல. அபரிதமான மெஜாரிட்டியோடு ஜெயலலிதாவின் ஆட்சி தமிழத்திலே அமைந்திருக்கிறது. இந்த தேர்தலில் அவர்கள் வென்றாலும் அந்தக் கட்சிக்கு புதிய வேகம் வராது. தோற்றுவிட்டாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. < ஆனால் இந்த தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும் என்றால், மீண்டும் நீங்கள் ஆளும்கட்சிக்கே ஓட்டு போட்டால் மறுபடியும் பத்தோடு பதினொன்று என்று ஒரு உறுப்பினர் அந்தப் பக்கம் போய் உட்காருவார். அப்படி உட்காருவதிலே கூட நமக்கு கவலையில்லை. ஆனால் இந்த ஆட்சியின் செயல்பாடுகளை நீங்கள் ஒப்புக்கொண்டதுபோல் ஆகிவிடும். எங்களுடைய ஆட்சியைப் பார்த்து மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசு என்று மூச்சுக்கு 30 தரம் ஜெயலலிதா அவர்கள், சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பேசிக்கொண்டிருக்கிறார். நான் சங்கரன்கோவில் வாக்காளர்கள் பெருமக்களை கேட்கிறேன். நாங்கள் மைனாரிட்டி அரசாக இருந்தாலும், ஒரு மெஜாரிட்டி அரசுக்குள்ள ஒரு கம்பீரத்தோடு ஆட்சியை நடத்தியவர் எங்கள் தலைவர். ஒரு அபரிதமான மெஜாரிட்டியோடு ஆட்சியில் அமர்ந்திருந்தால், எத்தனை பணிகளை செய்ய முடியுமோ, அந்த காரியங்களையெல்லாம் செய்து காட்டியவர் எங்கள் கலைஞர். 5 ஆண்டு கால ஆட்சியில் நாங்கள் மைனாரிட்டி அரசுதான். ஆனால் யாருக்கும் ஒரு ரூபாய் வரிபோடாமல் ஆட்சி நடத்தினோம். ஆனால் மெஜாரிட்டி அரசு வந்து ஒரு மாதத்திற்குள்ளேயே சட்டமன்றத்திற்கு கூட தெரிவிக்காமல், 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிகளை போட்டார்களே. அதுதான் மெஜாரிட்டி அரசுக்குள்ள லட்சணமா. நாங்கள் மைனாரிட்டி அரசுதான். ஆனால் நாங்கள் பஸ் கட்டணத்தை ஏற்றவில்லை. மெஜாரிட்டி அரசு, பஸ் கட்டணத்தை ஏற்றியதா இல்லையா. நாங்கள் மைனாரிட்டி அரசு. எங்களுடைய ஆட்சியில் 2 மணி நேரம்தான் மின்வெட்டு. மெஜாரிட்டி அரசு, 12 மணி நேரம் மின்வெட்டு. இதை நாட்டுக்கு சொல்ல வேண்டாமா. நாங்கள் மைனாரிட்டி அரசுதான். 13 ஆயிரம் மக்கள் பணியாளர்களுக்கு வாழ்வளித்து வேலை கொடுத்தோம். மெஜாரிட்டி அரசு, 13 ஆயிரம் பேரையும் வீட்டிக்கு அனுப்பியது. இதுதான் சாதனையா. ஆட்சி மெஜாரிட்டியா, மைனாரிட்டியா என்பது அல்ல. வேண்டிய கட்சி, வேண்டாத கட்சி என கலைஞர் பிரித்து பார்த்தது கிடையாது. இது அதிமுக வென்ற தொகுதி. நாங்கள் நினைத்திருந்தால் இந்த குதியை ஒதுக்கியிருக்கிற முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை கலைஞர். ஒருங்கிணைந்த நீதிமன்றம் இந்த சங்கரன்கோவிலுக்கு வேண்டும் என்று நீண்ட நெடுநாளாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதனை ஏற்று சங்கரன்கோவிலுக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரவேண்டும் என்று உத்தரவிட்டவர் கலைஞர். இதேபோல் இது விவசாயிகள், நெசவாளர்கள் நிறைந்த பகுதி. நெசவாளர்களின் வாழ்வு மேம்பாட்டுக்காக 500 யூனிட் "மின்சாரத்தை இலவசமாக வழங்கியிருக்கிறார் கலைஞர். ஆனால் இங்கு இருக்கிற ஒரு நெசவாளி சொல்லுகிறார் ஜெயலலிதா ஆட்சியில் வந்ததில் இருந்து இருளிலே மூழ்கியிருக்கிறோம். நெசவு தொழிலை செய்ய முடியவில்லை. பசியும் பட்டியோடு சாவதைவிட தறியை விற்று கால் வயிற்று கஞ்சி குடிப்போம் என்று கூறியிருக்கிறார். ஆகவே இந்த ஆட்சியில் ஒரு நெசவாளி தறியை விற்று வயிற்றுக்கு சோறுபோடுகிற அவல நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த அதிமுக அரசு. அந்த ஆட்சிக்கு நீங்கள் ஒரு எச்சரிக்கை மணியை அடிக்க வேண்டாமா. அந்த ஆட்சி நான் நினைத்ததுதான் சட்டம். நான் நினைத்ததை செய்வேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று ஒரு ஜனநாயகத்துக்கு புறம்பான ஆட்சியை நடத்துகிறாரே, அவருக்கு பாடம் புகட்ட வேண்டாமா. எங்களுக்கு இன்னொரு எம்எல்ஏ வந்து சேரலாம். அதனால் பெரிய பிரளயம் ஏற்பட்டுவிடாது. ஆனால் நீங்கள் மீண்டும் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், ஓகோ பஸ் கட்டணம் ஏற்றியதை ஒப்புக்கொண்டார்கள் என்று இனி ஏற்றலாம் என்று ஏற்றுவாரே தவிர இறக்குவாரா. ஒருமுறை நீங்கள் தோற்கடித்து காட்டுங்கள். சங்கரன்கோவிலிலே அதிமுகவை தோற்கடித்துக்

கருத்துகள் இல்லை: