நாட்டுக்கு ரொம்ப முக்கியம் மகா ஜனங்களே
கோச்சடையான் படப்பிடிப்பு நாளை மறுதினம் தொடங்குகிறது. சம்பிரதாயமாக படத்தை ஆரம்பித்துவிட்டு, வரும் மார்ச் 21-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லண்டனுக்குப் பறக்கிறது கோச்சடையான் யூனிட்.'கோச்சடையானில் ரஜினிக்கு இவர் டூப் போடவிருக்கிறார்... அவர் டூப் போடுகிறார்' என்ற ரீதியில் வரும் செய்திகள் அனைத்துமே பக்கா கப்சா. காரணம், தன்னால் முடியாமல் போனால் அந்த படமே வேண்டாம் எனும் அளவுக்கு இந்த விஷயத்தில் கறாராக உள்ளாராம் ரஜினி.
சண்டைக் காட்சிகள், அப்பா - மகன் வேடங்கள் என அனைத்திலுமே தானே நடிக்கவிருக்கிறார் ரஜினி. இதற்காக பிரிட்டிஷ் ஸ்டன்ட் கலைஞர்கள் குழுவை ஏற்பாடு செய்துள்ளனர்.
ரஜினிக்கேற்ப அவர்கள்தான் காட்சிகளை வடிவமைக்கிறார்கள். பீட்டர் ஹெயின் அதை இயக்குவார்.
ஏற்கெனவே ஹாங்காங் போன படத்தின் இயக்குநர் சவுந்தர்யா, அங்கு படத்தின் தொழில்நுட்பம் சார்ந்த பல விஷயங்களை முடிவு செய்துவிட்டு வந்திருக்கிறார்.
தொழில்நுட்ப ரீதியில் இந்தியாவின் முதல் ஹை டெக் படம் என்பதால் பக்கா திட்டமிடலுடன் படத்தை தொடங்குகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக