மலர், MMM நிர்வாகங்கள் அடிபணிந்தன

ஐந்து நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அந்த மருத்துவமனை நிர்வாகங்கள் இத்தனை வருடங்களாக நடத்தி வந்திருந்த அராஜக நடைமுறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து,
  • – கட்டாயமாக வாங்கி வைத்திருந்த சான்றிதழ்களை திருப்பித் தந்து விடுவது
  • – பணியை விட்டுப் போகாமலிருக்க போட்டிருந்த பிணை ஒப்பந்தத்தை ரத்து செய்வது
  • – சம்பளத்தை உயர்த்துவது
என்ற போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளான அடிப்படை நியாயங்களை நிறைவேற்றுவதாக அடிபணிந்திருக்கிறார்கள். மலர், MMM மருத்துவமனை செவிலியர் தமது கோரிக்கைகளில் வெற்றி பெற்றாலும் அப்போல்லோ செவிலியர்களின் போராட்டம் வெற்றி பெறும் வரை தமது ஆதரவு தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.
‘இழப்பதற்கு இனி எதுவும் இல்லை’ எனும் போது போராடுவது ஒன்றே தீர்வு. இதை தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்து தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடி உழைக்கும் மகளிர் தின வாரத்தில் வெற்றி ஈட்டியிருக்கிறார்கள் மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்கள்.
அடிப்படை வாழ்வுரிமை சுரண்டப்படும் போது அதை எதிர்த்து கிளர்ந்து எழுவது உழைக்கும் மக்களின் இயல்பு. ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் தகவல் தொடர்புத் துறை ஊழியர்கள் போன்றவர்கள் ‘தாம் அடிமைகள்’ என்பதை உணர்வதற்கு கொஞ்சம் அதிக காலம் பிடிக்கும். ஆனால் எல்லோரும் ‘தமக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை என்பது சுரண்டலின் வடிவம், அதன் மூலம் தமக்கு கிடைத்திருப்பது கௌரவமான வாழ்க்கை இல்லை’ என்று உணரும் போது, முதலாளித்துவ அதிகார அமைப்புகளை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவார்கள்.
____________________________________________________
- வினவு செய்தியாளர்