செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

சிறுமிகளை தேடும் பணக்காரர்களின் காம வெறி நீதிபதி கண்டனம்


இளம்பெண்களிடம் உறவு கொள்ள துடிப்பது பணக்காரர்களின் ஆடம்பர பொழுதுபோக்காக மாறி இருப்பதாக, கேரள மாணவி கற்பழிப்பு வழக்கில் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகில் உள்ள பரவூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு 100க்கு மேற்பட்டவர்களால் கற்பழிக்கப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் தந்தை உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கற்பழிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள், செல்வாக்குமிக்க உயர் அதிகாரிகள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் காண்டிராக்டர்கள் உள்பட பெரும் பணக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதானவர்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உள்ளூர் தலைவர் தாமஸ் வர்கீஸ் உள்பட 8 பேர், தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.டி.சங்கரன், அவர்களுடைய ஜாமீன் மனுக்களை டிஸ்மிஸ்' செய்தார்.
"வயது குறைந்த இளம்பெண்களுடன் உறவு கொள்ள துடிப்பது பணக்காரர்களின் ஆடம்பரமான பொழுதுபோக்காக மாறிவிட்டதாக'' கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.
"எய்ட்ஸ் நோய் பயமும் அவர்களுடைய இதுபோன்ற காம இச்சை வேட்டை'க்கு ஒரு காரணமாக இருக்கலாம்'' என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
http://youtu.be/YgYDJorzMYs

கருத்துகள் இல்லை: