வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஜெயலலிதா, ‘என்ன ஆச்சு ஜாபர் சேட் விவகாரம்...?’ என்று சீறியது

முன்னாள் உளவுத்துறைத் தலைவர் ஜாபர் சேட் வீட்டில் சோதனை’
 பலரால் நம்பவே முடியவில்லை. அதிகாரத்தின் உச்சியில் இருந்த, வானளாவிய அதிகாரம் படைத்த ஜாபர் வீட்டிலா சோதனை? பலருக்கு சோதனை கொடுத்த ஜாபருக்கே சோதனையா?... அந்த சில நிமிடங்களில் திக்குமுக்காடிப் போனார்கள் பத்திரிகையாளர்கள்.

தமிழகத்தின் அதிகார மையமாக இருந்து அனைவரையும் ஆட்டிப்படைத்த ஜாபர் சேட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸார் எப்படி நெருங்கினார்கள்....?

தி.மு.க. ஆட்சியின் போது, தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் வந்தது அல்லவா? அந்தப் புகாரின் கதாநாயகனே இந்த ஜாபர் சேட்தான். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவின் தொலைபேசியையும் ஒட்டுக்கேட்க ஜாபர் சேட் தவறவில்லை.
அப்போதே இதுகுறித்து ஜெயலலிதா கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தேர்தல் நேரத்திலும் ஜாபர் மீது சரமாரியாக புகார் தெரிவித்து தேர்தல் கமிஷனின் நடவடிக்கையைக் கோரினார். அதன்பிறகு, ஜாபர் சேட் அதிரடியாக மேற்கு வங்கத் தேர்தல் பார்வையாளராக மாற்றப்பட்டார்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அதிகாரிகளை அழைத்த முதல்வர் ஜெயலலிதா, ‘என்ன ஆச்சு ஜாபர் சேட் விவகாரம்...?’ என்று சீறியதுதான் தாமதம். சுறுசுறுப்பாக களத்தில் இறங்கினார்கள் போலீஸார்.

கருத்துகள் இல்லை: