வியாழன், 4 ஆகஸ்ட், 2011

விழுப்புரம் சிறுமியை எரித்துக் கொன்ற மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில்
மூதாட்டிக்கு ஆயுள் தண்டனைவிழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சேட்டு (எ)ஆறுமுகம், ஆட்டோ டிரைவர். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் செண்பகம் (11) அதே பகுதியிலுள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது வீட்டின் எதிரே வசிக்கும் தனம் (64), செண்பகத்தை அடிக்கடி அழைத்து கடைக்கு போகச்சொல்லி வேலை வாங்குவாராம். கடந்த 2008ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி தனது வீட்டின் முன்பு இருந்த சைக்கிளை எடுத்து உள்ளே விடுமாறு செண்பகத்திடம் தனம் கூறியுள்ளார்.
தள்ளும்போது சைக்கிள் கீழே விழுந்துள்ளது. ஆத்திரமடைந்த தனம், வீட்டுக்குள் சென்று மண்ணெண்ணெய், தீப்பெட்டியை எடுத்து வருமாறு செண்பகத்திடம் கூறியுள்ளார்.
எடுத்து வந்ததும் செண்பகத்தை பாத்ரூமில் அடைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து பாத்ரூம் கதவை அடைத்துவிட்டு ஓடிவிட்டார்.

செண்பகம் அலறித் துடித்தார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி செண்பகம் இறந்தார்.
இறப்பதற்கு முன் செண்பகம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆரோவில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தனத்தை கைது செய்தனர்.
 இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை உயிரோடு எரித்துக் கொன்ற தனத்துக்கு ஆயுள்தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

கருத்துகள் இல்லை: