வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கல்வி கற்பதற்கு அமெரிக்கா உகந்த இடமில்லை.சி.என்.ஆர். ராவ்

சென்னை: கல்வி கற்பதற்கு அமெரிக்கா உகந்த இடமில்லை என்று மூத்த இந்திய விஞ்ஞானியான சி.என்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கத் தான் விரும்புகின்றனர். இந்நிலையில் கல்வி கற்பதற்கு அமெரி்ககா சிறந்த இடமில்லை என்று பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் சி. என். ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராவ் பேசியதாவது,
அமெரிக்காவில் அனைத்துமே நன்றாக இருப்பதில்லை. இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருக்கும் இரண்டாம் தரமான கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். நீங்கள் வெளிநாட்டுக்கு செல்கிறீர்கள் என்பதால், அங்கு சிறந்த கல்வி கிடைக்கிறது என்று அர்த்தமில்லை. தற்போது இந்தியாவிலேயே அருமையான கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ஏராளமான பொற்றோர்கள் பணத்தைக் கொட்டி தங்கள் பிள்ளைகளை அமெரி்க்கப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இந்தியாவிலேயே சிறந்த பள்ளிக் கூடங்களை அமைத்தால் தான் அவர்கள் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கமாட்டார்கள் என்றார்.

கருத்துகள் இல்லை: