திங்கள், 27 ஜூன், 2011

Isaac Tigrett சாய்பாபா ரகசியத்தை வெளியிட போவதாக, மிரட்டும் அமெரிக்க பக்தர்


நகரி, ஜூன் 24 - சத்ய சாய்பாபாவின் உயில் ரகசியத்தை ஆறு வாரங்களில் வளியிடப் போவதாக அமெரிக்க பக்தர் ஒருவர் கூறியுள்ளார். புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய்பாபா சமீபத்தில் மரணமடைந்தார். இவரது ஆசிரம, அறக்கட்டளை, கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ. 35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பணம் கொடிகொண்டா போலீசார் நடத்திய வாகன பரிசோதனையின் போது சிக்கியது. இதையடுத்து கார் டிரைவர் ஹரீஷ்நந்தா, சென்னை தொழிலதிபர் ஒருவரின் கார் டிரைவரான சந்திரசேகர், பெங்களூரைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சொகுசு பஸ் ஒன்றில் கடத்தப்பட்ட பலகோடி பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புட்டபர்த்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். அறக்கட்டளை அறக்கட்டளை உறுப்பினர் ரத்னாகர் மற்றும் சென்னை தொழில் அதிபர் ஒருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில் சாய்பாபாவுக்கு நெருக்கமான அமெரிக்க பக்தர் ஜசஸ் டிரிகேட் புட்டபர்த்தியில் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அமெரிக்காவில் தான் ஒரு பீர் கம்பெனி நடத்தியதாகவும், அதில் பல ஆயிரம் கோடி பணம் கிடைத்ததாகவும் ஆனாலும் நிம்மதி கிடைக்காததால் போதைக்கு அடிமையானதாகவும் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் எனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் சாய்பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

அடிக்கடி புட்டபர்த்தி வந்து சாய்பாபாவை சந்தித்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கும் சாய்பாபாவுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது என்றும், கடந்த சில ஆண்டுகளாக புட்டபர்த்தியில் தங்கி இருந்ததாகவும், சாய்பாபா தன்னிடம் மனம் திறந்து பேசியதாகவும், அப்போது அவர் தனக்கு பிறகு வாரிசாக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஒரு உயிலை எழுதப்போவதாகவும், சாய்பாபா தன்னிடம் கூறியதாக ஐசக் டிரிகேட் தெரிவித்தார். இந்த உயில் ரகசியங்கள் தனக்கு தெரியும் என்றும் அந்த விபரங்களை இன்னும் ஆறு வாரத்திற்குள் வெளியிடப் போவதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: