புதன், 29 ஜூன், 2011

தங்கம் காவி இவை இரண்டுக்கும் என்னதான் சம்பந்தமோ தெரியவில்லை.

 காவி தரித்த சுவாமிகள் எல்லோரும் குடும்பப்பெண்களை விட தங்க மோகம் கொண்டு திரிகிறார்கள். கோவில்களோ தங்கத்தை கிலோ கணக்கில் புதையலாக வைத்துக்கொண்டிருக்கின்றன.

முதலில் முற்றும் துறந்த காலம்சென்ற  காஞ்சி காமகோடி  மகா பெரியவாள் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரி தனக்கு தானே தனது சங்கர மடத்தின் அடிபொடிகள் மூலம் கனகாபிஷேகம் செய்வித்துகொண்டார். அதாவது நூற்றி எட்டு தங்க வில்வ இலைகளால் தனது  தலையில் கொட்டிகொண்டார். தங்கம் அவரது தலையில் ஏதாவது கீறல் காயங்களை ஏற்படித்தியிருகும் யார் கண்டது?
அண்மையில் கொலை கற்பழிப்பு சந்தேக நபரான ஜெயந்திர சங்கராச்சாரிக்கும் இந்த கனகாபிஷேக கூத்து நடை பெற்றது.

இந்த தங்க அபிஷேகத்திற்கு தேவையான தங்கம் இங்கிலாந்தில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டது. வாழ்க இந்திய மதசார்பு இன்மை. 
முற்றும் துறந்த இந்த காஞ்சி சங்கராச்சாரி மகா மகா ஜாதி வெறி பிடித்த பெரும் நிலச்சுவான்தார். இவரின் வாரிசுதான் தற்போது கொலை கற்பழிப்பு வழக்குகளில் சிக்கி பதுங்கி திரியும் காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரி என்பவராகும்.

தற்போது கேரளாவில் உள்ள அனந்த பத்மநாபன் கோவிலிலும் ஏராளாமான தங்கம் கிடைத்துள்ளதாம். திருப்பதிக்கும் தங்கத்திற்கும் உள்ள உறவு உலகமே அறிந்ததுதான். அது என்ன தங்கத்தின் மேல் ஆண்டவனுக்கும் மோகம்? ஏழை பக்தர்களுக்கு மாத்திரம் உலகம் ஒரு மாயை போன்ற நைலான் கயுறுகளை விழுங்கக்கொடுக்கிரார்கள் அனால் தாங்களோ தங்கத்தில் குளிக்கிறார்கள்.

ஸ்ரீ சத்திய சாய் பாபா ஒரு அவதாரம் என்று மக்களால் பெருதும் மதிக்கப்படுபவராகும். இவர் ஏராளமான சமுக நலத்திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார். எவ்வளவோ நற்கருமங்கள் ஆற்றிய சத்திய சாயி பாபாவின் மறைவிற்கு பின்பு அவரது வாசஸ்தலமான யஜூர் மந்திரில் இருந்து 98 கிலோ தங்க ஆபரணங்கள் கணக்கு எடுக்கப்பட்டு வங்கியில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கும் தங்கம் தங்கம் தங்கம் இது தான் எமக்கு புரியவில்லை.


கருத்துகள் இல்லை: