செவ்வாய், 28 ஜூன், 2011

புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை!

புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கான விசேட நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்:

யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் தொகையான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். 3508 போராளிகள் மட்டுமே இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் எஞ்சியுள்ளனர்.
இவர்களையும் கூடிய விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வார இறுதியில் மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 600 போராளிகள் அவர்கள் உறவினர்களுடன் இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதுடன் தொழில்சார் கல்விகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண வாழ்விற்கு திரும்பியதன் பின்னர் இவர்கள் தமது வாழ்வில் பொருளாதார பிரச்சினைகளை சீர் செய்துக் கொள்ள முடியும் எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை: