செவ்வாய், 3 மே, 2011

ஒசாமா பதுங்கிடம் முஷாரப்புக்கு தெரியும்?

லண்டன் : பாகிஸ்தான் மாஜி அதிபர் பர்வேஷ் முஷாரபுக்கு ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்தது தெரியும் என புதிய சர்ச்சை ஒன்று தற்போது கிளம்பியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு பர்வேஷ் முஷாரப் எழுதிய சுயசரிதையில் ( இன் தி லைன் ஆஃப் ஃபயர் ) அபோதாபாத் மாளிகையில் அல்குவைதாவின் முக்கிய பிரமுகர் ஒருவர் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஒசாமா பின் லாடன் இவ்வளவு நாளாக இங்கேயா பதுங்கியிருந்தான் என பாகிஸ்தான் ஆச்சர்யம் தெரிவித்துள்ள நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பர்வேஷ் சுயசரிதையில் அபோதாபாத் பற்றி எழுதப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பர்வேஷ் முஷாரப் : நான் பாகிஸ்தான் அதிபராக இருந்த போது எப்போது என்னிடம் ஒசாமா எங்கிருக்கிறான் என்ற கேள்வி கேட்கப்பட்டாலும் , அவன் இருப்பிடம் குறித்து எனக்கு தெரியாது என்று தான் கூறியிருக்கி‌றேன் என சூசகமாக பதில் அளித்தார். பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பது பாகிஸ்தான் இறையான்மைக்கு எதிரானது என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை: